உதயசூரியன்கழகம் பிரித்தானியா கிளையின் முழுமையான ஆதரவுடன் வல்வை விக்னேஸ்வரா சனசமுக சேவா நிலையமும் வல்வை உதயசூரியன் கழகமும் இணைந்து நடத்தவிருக்கும் புலமைப்பரிசில் வகுப்புகள் எதிர் வரும் 03/01/2020 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு எமது நிலையத்தின் மண்டபத்தில் தலைவர் சி.மோ.சிவமயம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. ஆகவே அனைவரும் வருகை தந்து இவ்ஆரம்ப விழாவினை சிறப்புற செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்
இதற்கு அமைவாக 2020 ம் புலமைப்பரீட்சைக்கு தோற்றுவிக்கும் 5 ம் தர மாணவர்களையும் மற்றும் 2021 ம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு தோற்றுவிக்கும் 4 ம் தர மாணவர்களையும்
பெற்றோர்களாகிய நீங்கள் தொடர்ந்தும் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் நீங்களும் உங்கள் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி எமது மாணவர்களின் கல்வி தரத்தை மென்மேலும் வளர்ச்சி பாதையில் முன்னெடுத்து செல்வதற்கு உறுதுணையாக எம்மோடு பயணிப்பீர்களாக.
மற்றும் *யோகா* வகுப்புக்களும் 05/01/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி தொடக்கம் 7.30மணி வரை நடைபெறும் .
*📚எண்ணும் எழுத்தும் கண்ணென கொள்🖌*
🙏🙏நன்றி 🙏🙏
பா. சிவகணேஷ்,
செயலாளர்
வல்வை விக்னேஸ்வரா சனசமுக சேவா நிலையம்,
02/01/2020.








