அமெரிக்கா செல்ல இருக்கும் “அதி வேக நீச்சல் மகள்” தனுஜா ஜெயக்குமார்

0
691 views

அமெரிக்கா செல்ல இருக்கும் “அதி வேக நீச்சல் மகள்” தனுஜா ஜெயக்குமார்

வல்வெட்டிதுறையைப் பூர்வீமாகக் கொண்ட தற்பொழுது தமிழகம் திருச்சியில் வசித்து வரும் நீச்சல் வீராங்கனை செல்வி தனுஜா ஜெயக்குமார் எதிர்வரும் அக்டோபர் மாதம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள நீச்சல் போட்டி ஒன்றில் பங்கு பெறத் தகுதி பெற்றுள்ளார் .

நேற்று இந்தியாவின் மகாராஸ்திரா மாநிலத்தின் பூனே நகரில் இடம்பெற்ற இந்திய அளவிலான 10th Modem Pentathalon National Championships 2019 ( 10th Buathle / Triathle National Championships 2019 ) போட்டிகள் இடம்பெற்றது .

குறித்த போட்டி எதிர்வரும் அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இடம்பெறவுள்ள 10th ( Buathle / Tiathle World Championships 2019 ) முன்னோடியாக இடம்பெற்றது .
நேற்று இடம்பெற்ற குறித்த 2 போட்டிகளில் செல்வி தனுஜா 1 ஆம் மற்றும் 2 ஆம் இடங்களைப் பெற்றுளார் .

இதன் மூலம் மிக இலகுவாக 10th Buathle / Tiathle | World Championships 2019 போட்டிகளில் பங்குபெறும் தகுதியைப் பெற்றுள்ளார் .

15 வயதுக்கு கீழ்பட்ட பெண்கள் பிரிவினருக்கான
T 800 Meters Run – 100 Meters Swim – 800 Meters Run ஐ 07 : 43 : 03 நிமிடத்தில் அடைந்து முதல் இடத்தையும்,

4×400 Run , 4 x 25 Swim , 4 x 5 Hits ; 5M 16 . 15 . 87 நிமிட நேரத்தில் அடைந்து 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் .

ஆனாலும் செல்வி தனுஜா ஜெயக்குமார் இலங்கை கடவுச்சீட்டைப்பெற்று இந்தியாவில் வசிப்பதால் இந்தியாவிலிருந்து வெளிநாடு ஒன்றில் போட்டியிடுவதில் இடர்கள் உள்ளது எனக் கூறப்படுகின்றது .

ஆனாலும் தனுஜாவின் தந்தை திரு.ஜெயக்குமார் தமது வழக்கறிஞர் மூலம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள போட்டிகளில் கலந்துகொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளார்,
இந்தியாவில் பல போட்டிகளில் பங்குகொண்டு பல வெற்றிகளை ஈட்டி ஈழதேசத்துக்கும், உலகத் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் #செல்வி_தனுஜா_ஜெயக்குமார் அமெரிக்காவிற்கும் சென்று தனது அதீத திறமைகளை நிலைநாட்ட வேண்டுமென மனதார வாழ்த்துகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here