பல்லவராயன்கட்டில் உதயமாகும் தங்கப்பா ஞாபகார்த்த இலவச கணினிப் பயிற்சி நிலையம்

0
749 views

வல்வெட்டித்துறை வல்வை 21 நண்பர்கள் நடாத்தும், வல்வை விளையாட்டு கழகத்தின் தலைமுறைகள் கடந்த தலைவர் அமரர் மு.தங்கவேல் (தங்கப்பா) ஞாபகார்த்தமான “கணினி பயிற்சி நிலையம்” ஆனது கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய ஓர் கிராமமான பல்லவராயன் கட்டு எனும் கிராமத்தில் வரும் 07.07.2019 அன்று மாலை 3.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

கொடிய யுத்தம் நடைபெற்று பத்து ஆண்டுகளை கடந்தும் கூட இன்று வரை எந்த விதமான அபிவிருத்திகளும் அற்ற நிலையில் காணப்படும் குறித்த கிராமத்தில் வாழும் எமது எதிர்காலச் சங்ததிகளின் அழிக்க முடியாத சக்தியான கல்வியை போதிக்கும் முகமாகவும், கணினி மயமாகிகொண்டிருக்கும் இவ்வுலகில் அவர்களையும் எதிர்நீச்சல் போடுவதற்கு தயார்படுத்தும் குறிக்கோளுடனும் எமது குழுமத்தில் முதலாவது கணினிப் பயிற்சி நிலையமானது, குறித்த கிராமத்தில் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலவசமாக பயிற்சிகள் வழங்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஆறு கணினிகளை கொண்ட கணினிப் பயிற்சி நிலையத்தின், கணினிகள் மற்றும் நிலையத்திற்கான செலவுகள் அனைத்தையும் தமது நிதிப்பங்களிப்பிலேயே மேற்கொண்டதுடன், ஆசிரியருக்கான மாதாந்த கொடுப்பனவுகளையும் வல்வை 21 நண்பர்களே பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து செயற்படும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here