வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடாத்தும் வல்வைக்குட்பட்ட 10 அணிகளுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி வல்வை தீருவில் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
A பரிவில் 4 வெற்றிகளைப்பெற்று இளங்கதிர் A அணி முதலாமிடத்தையும் 3 வெற்றிகளைப் பெற்று சைனிங்ஸ் A அணி இரண்டாமிடத்தையும் பெற்றன.
B பரிவில் 4 வெற்றிகளைப்பெற்று ரேவடி A அணி முதலாமிடத்தையும் 3 வெற்றிகளைப் பெற்று நேதாஜி அணி இரண்டாமிடத்தையும் பெற்றன.







