மூன்றாமிடத்தை பெற்றது வல்வை மகளிர் ம.வி

0
531 views

வலய மட்ட 20 வயதுப்பிரிவு பெண்களுக்கான கடற்கரைக் கரப்பந்தில் நடப்பாண்டு சம்பியனை  வீழ்த்தி சாதித்துள்ளது பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயரதரப்பாடசாலை.

வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான கடற்கரைக் கரப்பந்தாட்டத்தில்  20 வயதுப் பெண்களுக்கான  இறுதியாட்டம்  நேற்று  முன்தினம்  வல்வை  உதயசூரியன் கடற்கரையில்  இடம்பெற்றது

இவ் இறுதியாட்டத்தில் கடந்த வருடச் சம்பியனான  உடுப்பிட்டி மகளிர் கல்லூரியும் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையும் மோதின. மூன்று செற்களைக் கொண்ட  இவ் இறுதியாட்டத்தில்  முதல் செற்றை  21:18 என்று மெதடிஸ்  பெண்கள் பாடசாலை கைப்பற்றியது. .அடுத்த செற்றில் அபாரமாக விளையாடிய உடுப்பிட்டி அணி 22:20 என வெற்றி பெற்று ஆட்டத்தை  சமப்படுத்தியது.

தொடர்ந்து வெற்றியாளரைத் தீமானிப்பதற்கான மூன்றாவது செற்றை 15:13 என்ற புள்ளிகளைப் பெற்று 2:1 என்ற செற்கணக்கில் வெற்றியீட்டி சம்பியனாகியது  பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் அணி. இதில் மூன்றாமிடத்தை வல்வை மகளிர் கல்லூரி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here