வட மாகாண தொண்டராசிரியர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை நியமனம் வழங்கப்படாத 288 தொண்டராசிரியர்களே இவ்வாறு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வருட ஆரம்பத்தில், வட மாகாண தொண்டராசிரியர்கள் 1044 பேருக்கான நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்று அவர்களில் இரு தொகுதியினராக மார்ச் மாதம் 28 ஆம் திகதி 182 பேருக்கு அலரி மாளிகையிலும், யூலை மாதம் 22 ஆம் திகதி 457 பேருக்கு யாழ்.இந்துக்கல்லூரியிலும் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இதுவரை நியமனம் வழங்கப்படாத 288 தொண்டராசிரியர்களே இவ்வாறு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாதகமான முடிவினை ஆளுநர் பெற்றுத் தராத பட்சத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவும் தயாராகவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.








