பளுதூக்குதலில் தொடர் சாதனைகளைப் புரியும் வல்வை வீராங்கனை..

0
832 views

பளுதூக்குதலில் தொடர் சாதனைகளைப் புரியும் வல்வை வீராங்கனை..

அனைத்து பல்கலைகழகங்களுக்கிடையிலான பளுதூக்குதல் போட்டி தொடர் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் யாழ் பல்கலைக்கழகம் சார்பாக போட்டிகளில் பங்குபற்றிய வல்வை சைனிங்ஸ் வீராங்கனை இராமகிருஸ்ணன் தசாந்தினி முதலாமிடத்தினை பெற்றுள்ளார். அத்துடன்  1ம் இடம்(தசாந்தினி), நான்கு 2ம் இடம், இரண்டு 3ம் இடங்களை பெற்று யாழ் பல்கலைக்கழகம் 19 புள்ளிகளுடன்மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
சப்ரகமுவா மற்றும் ஸ்ரீஜெயவர்த்தன பல்கலைக்கழகங்கள் 21 புள்ளிகளுடன் இணைச்சம்பியனாகின.

தசாந்தினியின் வெற்றிப்பயணம் தொடரவும் சர்வதேச போட்டிகளில் விரைவில் பங்குபற்றி சாதிக்க வேண்டுமெனவும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

வாழ்த்துக்கள் தசாந்தினி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here