வல்வைஅணி 6-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி

0
609 views

அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது வல்வை A அணி
வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகமானது மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் யாழ்மாவட்டரீதியில் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுத்தொடரானது இன்றைய தினம் (10/09/2018) சிதம்பராக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

 

அவ்வகையில் இன்றைய தினம்இடம்பெற்ற முதலாவது போட்டியில் வல்வை A அணியினை எதிர்த்து வரணி யூத் விளையாட்டுக்கழகமானது மோதியது. இந்தப்போட்டியிலே வல்வை A அணியானது 6-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றியீட்டி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது. வல்வை A அணிசார்பாக தர்சன், ரஷி தலா 3 கோல்களை பெற்றுக்கொடுத்தனர்.
வெற்றிபெற்ற வல்வை A அணிக்கு வாழ்த்துக்கள்.
வல்வை A அணியானது தனது அடுத்த சுற்று ஆட்டத்தில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகத்தை 19/09/2018 அன்று எதிர்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here