முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நெடுங்காலமாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என கடந்த 6 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அது தொடர்பாக விவாதிக்க இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது.
அமைச்சரவை கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.
அமைச்சரவை கூட்டத்தில், ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விதி 161 கீழ் விடுவிக்கலாம் என ஆளுநருக்கு பரிந்துரைப்பதென முடிவு செய்யப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்திப்பில் தெரிவித்துள்ளார்.








