கண்டண போராட்டத்தில் குதித்த யாழ் மருத்துவர்கள்!

0
875 views

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் மருத்துவர் ஒருவரை அச்சுறுத்தும் வகையில் அவரது வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக நேற்று திங்கட்கிழமை மதியம் அரை மணிநேர கண்டன போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் மருத்துவர் இமானுவேல் சாந்தகுமார் என்பவரின் கொக்குவில் – சம்பியன் லேனில் உள்ள வீட்டிற்குள் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றது.

3 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 6 பேர் கொண்ட கும்பல், வீட்டுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

வீட்டிற்குள் சென்றவர்களின் கைகளில் பொல்லுகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் காணப்பட்டதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

வீட்டின் யன்னல், கண்ணாடிகள் உள்பட்ட வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை குறித்த கும்பல் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

வீட்டிலிருந்த எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை’ என்றும் மருத்துவர் இமானுவேல் சாந்தகுமார் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ் குடாவில் இடம்பெறும் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ சனிக்கிழமை தெரிவித்திருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதலாளிகளை பொலிஸார் விரைந்து கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்த மருத்துவர்கள், கைது செய்யப்பாடத விடத்து தாம் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here