பல வருடங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த க பொ த உயர்தரம் மூன்று கணித பிரிவு மாணவர்களுடன் மீண்டும் 2011 இல் ஆரம்பிக்கபட்டு 2014 ஆம் ஆண்டு மூவரும் சித்தியடைந்து ஒருவர் மொறட்டுவ பல்கலைகழகத்தில் NDT இற்கு தெரிவாகியிருந்தார். அடுத்த வருடம் 2012 இல் உயிரியல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு செல்வன் க கருணரூபன் தனது கடும் முயற்சியினால் உயிரியல் பாடத்திற்கு A சித்தி பெற்றுள்ளார். உயிரியல் பாடத்திற்கு பட்டதாரி ஆசிரியர் இதுவரை தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிதம்பரவில் உயிரியல் துறை ஆரம்பிப்பதற்கு எமது கல்லூரியில் உயிரியல் கற்று சிறந்த பெறுபேறுகள் பெற்று பெருமை சேர்த்த செல்வன் க கருணரூபனை சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (International) வாழ்த்தி அவருக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கின்றோம்.