வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் வைத்திலிங்கம் ஞாபகார்த்தமாக வடமாகாண கரப்பந்தாட்ட மத்தியஸ்த்தர் சங்கம் நடத்திய வடமாகாண ரீதியாக நடத்திய கடற்கரைகரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நேற்று சைனிங்ஸ் கடற்கரையில் இடம்பெற்றது.



இதன் இறுதியாட்டத்தில் தொண்டைமனாறு கலையரசி விளையாட்டுக்கழகமும் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக்கழகமும் பலப்பரீட்சை நடத்தின.
மூன்று செற்களைக்கொண்ட இச்சுற்றுப்போட்டியில் முதல் செற்றை 21:18என்ற புள்ளிகள் அடிப்படையில் கலையரசி அணி பெற்றுக் கொள்ள அடுத்த செற்றை 21:18 மத்திய விளையாட்டுக்கழகம் கைப்பற்றி ஆட்டத்தை சமப்படுத்தியது.இனையடுத்து வெற்றியாளரைத் தெரிவு செய்வதற்கான மூன்றாவது செற்றை பலத்த போராட்டத்தின் மத்தியில் 15:6 என வென்று வடமாகாணசம்பியனாகியது தொண்டைமனாறு கலையரசி விளையாட்டுகழகம். இதில் மூன்றாமிடத்தை ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது. போட்டியின் தொடர் ஆட்டநாயகனாக ஆவரங்கால் மத்திய விளையாட்டுக்கழக வீரர் சுஜீவனும் ஆட்ட நாயகனாக கலையரசி விளையாட்டுக்கழக வீரர் டிலக்சனும் தெரிவு செய்யப்பட்டனர்.











