றெயின்போ வி.க நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேதாஜி எதிர் றெயின்போ வி.க மோதியது. இரு அணியும் எந்தவித கோல்களும் அடிக்காது ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.வெற்றியை தீர்மானிப்பதற்கு தண்ட உதை வழங்கப்பட்டது. 4:1 என்ற கோல்கணக்கில் நேதாஜி வி.க வெற்றி பெற்று சம்பியனாகியது .
ஆட்ட நாயகனாக றெயின்போ வி.க வீரர் பிரகாஷ் தெரிவு செய்யப்பட்டார். சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாக நேதாஜி வி.க. வீரன் தர்சன் தெரிவு செய்யப்பட்டார்.சிறந்த கோல்கீப்பராக நேதாஜி வி.க வீரன் ஜிவிந்தன் தெரிவு செய்யப்பட்டார்.















