மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கு இடைக்கால தடை உத்தரவு

0
571 views

ஈ.பீ.டீ.பியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வேலும்மயிலும் – குகேந்திரன் வழக்கு முடியும் வரையில் சபை அமர்வுகளில் அமரவோ வாக்களிக்கவோ முடியாது என மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்றைய தினம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் ஈ.பீ.டீ.பி கட்சியை சேர்ந்த வேலும்மயிலும் – குகேந்திரன் இரட்டைப் பிரஜா உரிமை கொண்டவர் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்க முடியாது என்ற காரணத்தினால் குகேந்திரனின் மாநகர சபை உறுப்புறுமை செல்லுபடியற்றது என தேர்தல் ஆணையகத்திற்கு உத்தரவிடக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கினை நேற்றைய தினம் மேன் முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்காக எடுத்துக்கொண்டது . இதன்போது வழக்காழர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ம.ஆ.சுமந்திரன் மற்றும் நிரான் அங்கிற்றல் இ செல்வி ஜே.அருளானந்தம் ஆகியோர் ஆயராகினர்.

எதிர் மனுதாரர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அப்துல் நஜீப் முன்னிலானார்.
குறித்த வழக்கின் எதிர் மனுதாரர் கொமன்வெல்த்தில் அங்கம் வகிக்கும் ஓர் நாட்டிலேயே இரட்டைப் பிரஜா உரிமை கொண்டுள்ளதனால் உறுப்பினராக அங்கம் வகிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டது.

இருப்பினும் 53ம் ஆண்டு குறித்த சட்டம் வரும்போது அவ்வாறு ஏற்பாடு இருந்தபோதும் 1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதிய சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டதனை அடுத்து விசாரணைக்காக எதிர்வரும் ஒக்டோபர் 4ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு வழக்கு நிறைவு பெறுவம் வரையில் எதிர் மனுதார்ர் சபை அமர்வுகளில் பங்குகொள்ளவும் இடைக்காலத் தடை நீடிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here