வல்வெட்டித்துறை சனசமூக சேவாநிலையத்தின் பவளவிழாக் கொண்டாட்டமும் புலம்பெயர் வல்வையர் சமூகத்தின் உணர்வாளர்களின் பங்களிப்பும்.
வல்வெட்டித்துறை சமூகம் தன் வரலாறை எழுதிக்கொள்வதில் அக்கறை உள்ளவர்களாக இருப்பதாக உலக ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இதன் வரிசையில் வல்வெட்டித்துறை சனசமூக சேவா நிலையத்தின் 75 பவள விழா கொண்டாட்டத்தை 2019 ம் ஆண்டு வல்வெட்டித்துறை வைத்தீஸ்வர பெருமானின் திருவிழா முடிந்து கோடிமாரியின் திருவிழாவுக்கு முன்பாக இடைக்காலத்தில் ஈஸ்ரார் விடுமுறையும் வருகின்ற படியால் அக்காலத்தில் நடாத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு 2019 ம் ஆண்டு பங்குனி மாதம் 29, 30, 31 ம் திகதிகளில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
தற்போது முன் அறிவித்தலாக ஊர் எங்கும் சிறிய விளம்பர நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது.
தற்போது ஊரில் நிறையப் பேர் தற்போதுள்ள விடுமுறைக்கு ஊர் வந்து கலகலப்பாக இருக்கின்றது. ஊரில் ஆட்டோ ஓட்டுநர்கள் ரொம்ப பிசியாக இருக்கின்றார்கள்.
2019 ம் ஆண்டு அம்பாளின் திருவிழாவுக்காக தனிவிமான ஒழுங்குகள் செய்யப்படுகின்றது. அம்பாளின் அனுக்கிரகத்தால் இவ்வருட இறுதியில் பலாலி விமான நிலையம் மீண்டும் இயங்க இருப்பதாக நம்பகமான தகவல் கிடைக்கின்றது.
வல்வெட்டித்துறையை சேர்ந்த திரு.லவன் அவர்கள் விமான சீட்டு ஒழுங்கு செய்யும் நிலையத்தால் லாப நோக்கற்ற அம்பாள் சேவையாக நடத்தப்பட இருக்கின்றது.
தாய் ஊருக்கு தனிவிமானத்தில் வரும் அதிஸ்டசாலிகள் முந்திக்கொள்ளுங்கள்.
வல்வெட்டித்துறையின் பவளவிழாக் கொண்டாட்டம் புலம்பெயர் தேசத்து நட்புக் குழுக்களுக்கு கௌரவ அழைப்பாக இவ் அறிவித்தலை சமர்ப்பிக்கின்றோம். வல்வையர் நட்பு குழுக்கள் இவ்விழாவை ஒரு சவாலாக ஏற்று நேரடி பங்களிப்பும் பொருள் உதவிகளையும் வழங்கி வல்வையின் வரலாறை கௌரவமாக வரைவதற்கு கடமைப்பாடு உடையவர்கள்.
புலம்பெயர் வல்வை புத்திஜீவிகளிடம் இருந்து பவறவிழா கொண்டாட்டம் பற்றி ஆலோசனைகள் வரவேற்றப்படுகின்றது. முப்பெரும் விழாவாக கொண்டாடுவதற்கு வல்வையர் கல்விச்சமூகம் தயார்படுத்திக் கொள்கின்றது. வல்வையின் கொடை வள்ளல்களாலும் புலம்பெயர் வல்வையர் நலன்புரிச் சங்கங்களாலும் வல்வையின் வரலாறு கௌரவமாக வரையப்பட்டு வருகின்றது. கனடா நலன்புரிச்சங்கம் ஆரம்பகால உதவிக்கு ஒரு லட்சத்து பன்னீராயிரம் ரரூபாவை வழங்கியிருக்கிறது.
கனடா வல்வையர்கள் அமெரிக்க பெரும் கண்டத்தில் கோடியாக் கரையில் இருந்து வந்த முத்துமாரிக்கு கோயில் அமைத்தவர்கள். கனடா வல்வையர்களின் ஒன்றுகூடல்களும் முத்துமாரியின் கோயில் சிறப்பம்சங்களும் இன்னொரு நூற்றாண்டுக்கு அழியாத வரலாற்று காவியம்.
நேற்று நடைபெற்ற விழாக் குழுவின் வாராந்த கூட்டத்துக்கு வல்வை லண்டன் நலன்புரிச்சங்கத்தின் போசகர் என்ற கௌரவிப்புக்கும் வல்வையின் சிறிய வயது புகைப்பட கலைஞர் என்ற பணிவான மரியாதையின் நிமித்தம் அழைப்பை ஏற்று இருந்தேன். இவர்களின் விழா வல்வையர் வரலாற்றில் வல்வையர் இந்திர விழாப்போல் வரலாறு பதியும். விழாக்குழு வழங்கிய கௌரவத்தை ஜந்து கண்டங்களில் வாழும் வல்வையர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
நேற்றைய கூட்டத்தில் விழாவை சிறப்பிக்க வல்வையின் மூத்த கலைஞர்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைப்பது. கல்லுரிகளில் அதிபர்கள் சிறப்பு மாணவர்களுடன் விழா சிறப்பாக அமைய அழைத்து ஆலோசனைகள் பெறுவது புலம்பெயர் தேசத்து வல்வை மக்களின் பங்களிப்புக்கள் பற்றி நிறைய விடயங்கள் சிந்திப்பு செய்யப்பட்டது.
வல்வெட்டித்துறை சனசமூக சேவா நிலையத்தின் 75 வது பவளவிழா தன்னை வல்வையர் என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வெhருவருக்கும் உரித்தானது. கால வரலாற்றில் இவ்விழாவுக்கு ஏதாவது ஒரு பங்களிபை வழங்கி உரித்தான உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்வோம்.
உங்களை போன்ற வல்வை வாசத்துடன்
சோ.செ. தெய்வச்சந்திரன்
வல்வை மாமாச்சி
31.07.2018









