‘கதிர்காமத்தம்பி விமலதாஸ்’ காலத்தால் அழிக்கமுடியாத வரலாறு!…

0
1,287 views

கனடாவிலிருந்து வர்ணகுலத்தான் (பொன்.சிவகுமார்) அவர்கள், அமரர் கதிர்காமத்தம்பி விமலதாஸ் அவர்கள் பற்றி முகநூலில் பதிவு செய்த கட்டுரை இங்கு மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது

கதிர்காமத்தம்பி விமலதாஸ்’  காலத்தால் அழிக்கமுடியாத வரலாறு!…

வல்வெட்டித்துறைமண் அரியபல மனிதர்களை காலத்திற்கு காலம் எங்கள் சமூகத் திற்காக தந்து பெருமை கொண்டாடும் வரலாறுகொண்டது. அவர்கள் ஒவ்வொரு வரும் ஏதாவது ஒருவகையில் தனித்திறமையுடன் விளங்கி தத்தமதுகாலத்தில் எம துமண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். இவ்வகையில் ‘பிரதம நிலஅளவை அத் தியட்சகர்’ விமலதாஸ் அவர்களின் திறமையும் மகிமையும் பிரமிப்பூட்டும் அவர் சாதனைகளும் பலவாகும். தமிழ் சிங்களம் ஆங்கிலம் எனும் மும்மொழிப் பாவ னையும் பரந்தஅறிவும் எடுத்ததை முடிக்கும் அவரது நேர்த்தியான செயல்களும் மற்றவர்களுடன் பழகும் அவரதுதன்மையும் விவரிக்கமுடியாதவை. தான், தனது குடும்பம்,, தனதுசமூகம்(கழகம்), தனதுஊர், தனதுதேசியம் என சகலமட்டங்களிலும் பரந்துவிரிந்த பார்வை அவருடையது.

15.03.1953 ல் பிறந்த இவர்தனது ஆரம்பக்கல்வியை தனது அயலில் இருந்த வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலையிலும் உயர்தரக்கல்வியை சிதம்பராக் கல்லூரியிலும் கற்றுத்தேறினார். தொடர்ந்து கொக்குவில் பல்தொழில்நுட்ப கல்லூ ரியில் நிலஅளவையாளர் கற்கைநெறியினை மேற்கொண்டு அதன்பட்டப்படிப்பை தியத்தலாவையில் வெற்றிகரமாக முடித்து நிலஅளவையாளராக 1974 ஆண்டின் பிற்பகுதியிலிருந்து பணியாற்றத்தொடங்கினார். இறுதியாக 2012 ஆம்ஆண்டு வல் வெட்டித்துறை ஸ்ரீமுத்துமாரிஅம்மன் தேவஸ்தான செயலாளராக கடமை ஏற்றதும் தனது ஐம்பத்தொன்பதாவது வயதில் பதவியிலிருந்து விடுப்புபெற்றிருந்தார்.

மாணவனாய் இருந்தநாட்களிலும் 1970 பாராளுமன்றத்தேர்தல் மற்றும் உள்ளூராட் சி மன்றத்தேர்தல்களிலும் இவர் துடிப்புடன் பணியாற்றி தனது சமூககடமையை செய்திருந்தார். தொடர்ந்து 1972 இலங்கை குடியரசானபோது இலங்கை போக்கு வரத்துச்சபையின் 751 இலக்க பஸ்ஒன்றிலிருந்த தனிச்சிங்கள அறிவிப்புபலகையை வல்வெட்டித்துறை சந்தியில் கழட்டிவீசினார் என்ற சந்தேகத்தில் கால்துறையால் விசாரிக்கப்பட்ட வரலாறும் இவருக்குண்டு. 1977 பொதுத்தேர்தலிலும் அரசாங்க ஊழியராக இருந்தும் ஊருடன்இணைந்து இவர்காட்டிய ஆர்வமும் வேகமும் குறிப்பி டக்கூடியதே. இறுதியாக 2018 உள்ளூராட்சி தேர்தலில் பாரம்பிய கட்சியொன்றின் நியமனப்பட்டியலில் இவரது பெயர் சேர்க்கப்பட்டமை இவரது இனம்சார்ந்த நீண்ட அரசியல் வரலாற்றின் தொடர்ச்சியே எனலாம்.

1974 ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் நாலாவது தமிழாராச்சி மகாநாடு நிகழ்ந்தது. இம்மகாநாட்டின் அலங்காரஊர்த்தி பவனிக்காக வல்வெட்டித்துறையிலிருந்து அமெரி க்கா சென்றடைந்த பெருமைமிகு ‘அன்னபூரணிஅம்மாள்’ கப்பலின் மாதிரிஉருவம் அமைக்கப்பட்டது. இதனை அமைத்த இளைஞரணியில் இவரும் இணைந்து செய லாற்றினார். அவ்ஊர்வலத்தின் இறுதியிலும் அதன்பின் நடந்த தமிழாராச்சி மகா நாட்டு படுகொலைகளிலும் அதிஸ்டவசமாக உயிர்தப்பி செருப்புமின்றி இவர் ஊர்வந்து சேர்ந்திருந்தார்.

இவைதவிர 1970 -1974 காலப்பகுதியில் வல்வெட்டித்துறை விக்னேஸ்வர சனசமூக சேவா நிலையத்தின் செயலாளராக இவர் ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்கா தவை. குறிப்பாக அக்காலத்தில் பல சிரமதானப்பணிகளை மேற்கொண்டு அழகிய உதயசூரியன் கடற்கரையை இவர் அழகுபடுத்தியமை; இன்றும் நினைவு கூரத்தக் கது. அதன்தொடராக நாற்பதுவருடம் கடந்தும் தான்புனிதமாக போற்றிய அக் கடற்கரை அழிந்துவிடாமல் அணைகட்டிப் பாதுகாக்கும் முன்னெடுப்பில் இவரெடுத்த முயற்சியினையும் யாரும் மறந்துவிடலாகாது. முன்புஇருந்து சிதைந்தஅணைக்கு பதிலாக புதியஅணையை கட்டுவதாக திட்டமிட்டு சாதுரியமாக அதற்கான முன் அனுமதியை இவரே பெற்றிருந்தார். தனது மைந்தர்களான பிரகாஸ்இ சத்தி மற்றும் செயலாளரான மயூரனுடன் என்பவர்களை உதவியாகக்கொண்டு இவர் இத்தகு பெருமுயற்சியினை மேற்கொண்டார். இவ்வாறு இவரது முயற்சியினால் ஒருஅடி நிலம்கூட பயனின்றி போகாமல் உருவாக்கப்பட்டதே இன்றைய உதயசூரியன் உல்லாசக்கடற்கரை ஆகும். இது இவர் கற்றுக்கொண்ட நிலஅளவை பயிற்சியின் உச்சவெளிப்பாடும் தன்னைச்ச10ழ இருந்தசமூகத்தில் இவர் காட்டிய அதீதகரிச னையின் அடையாளமும் ஆகும். தான் மட்டுமன்றி தனது மைந்தர்களையும் சமூகப்பணிகளில் ஈடுபாடுகொள்ளவைக்கும் பரந்தமனப்பான்மையையும் நாம் இங்கு கண்டுகொள்ளலாம். பொருளல்ல இங்குபெருமை அதன்பயன்தான் இங்கு முழுமை.

குறிப்பாக கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரியில் கற்றுக் கொண்டிருக்கும் வேளையில் முன்னிரவில் வல்வெட்டித்துறை ரேவடிப்பகுதியில் இயங்கிய ‘தமிழ்த் தாய்’ கல்விமன்றத்திலும் ஆசிரியராக செவ்வனே இவர் கடமையாற்றி வந்தார். குறிப்பாக அவருக்கிருந்த பொதுஅறிவுக்கேற்ற வகையில் சமூகக்கல்வி பாடத்தை சிறப்புற அவர் அங்கு(எனக்கும்); கற்பித்திருந் தார். ‘எனதுசமூகம்’ பற்றிய எனது இன்றையபார்வைக்கு வீட்டிலும் பாடத்திலும் அவர் எனக்கு காட்டிய அவரது பார்வையும் காரணமாகலாம். 1979 செப்டெம்பர்மாதம் முழுவதும் எனக்கு கிடைத்த பாடசாலை ஓய்வுநாட்களை இரத்தினபுரி யில் ‘விமலதாஸ்’ என்னும் வரலாற்றுடன் கழித்த பெருமையும் எனக்குண்டு.

குட்டிமாஸ்டரின் பாடம் என்றழைக்கப்பட்ட தமிழ்த்தாய்க் கல்விமன்றத்தில் கற்பித்த ஆசியர்களாக அன்று தொழில் நுட்பக்கல்லுரியில் மாணவர்களாயிருந்த குட்டிமாஸ் டர்(சண்முகநாதன்) சிவானந்தம்மாஸ்டர் மற்றும் மதிமாஸ்டர் மோகன்மாஸ்டர் என்ப வர்களும் இங்கு குறிப்பிட வேண்டிய வர்களே. இப்பாடசாலையிலேயே பகல் பொழுதில் அன்றைய வல்வெட்டித்துறையில் முதன்முதல் மாலுமிகள்சங்கம் மற்றும் மாலுமிகள் பயிற்சிக்கல்லூரி அமைத்த திருவாளர் அம்பலம் மாஸ்டர்; பலஇளைஞர் களை புதிய கப்பல்மாலுமிகளாக வல்வெட்டித்துறைக்காக உருவாக்கிக் கொண்டிருந்தமையும் பலரும் மறந்துவிட்ட சங்கதிகளாhகும்.

இவரது நிலஅளவையாளர் சேவைநாட்களில் களுத்துறை இரத்தினபுரி கொழும்பு அநுராதபுரம் கெக்கிராவா என தென்னிலங்கையிலேயே பலகாலம் இவருக்கு பணி யாற்றும் வாய்ப்புக்கிடைத்தது. இதனால் சிங்களமொழியில் நிரம்பிய பாண்டித் திய த்தை பெற்றுக்கொண்டார். தனதுசேவையின் காரணத்தால் பழைய நிலஉறுதி களையும் ஆர்வத்துடன் வாசிக்க கற்றுக்கொண்டார். இதன்காரணமாக இன்று பாவனையில் இருந்து மறைந்துவிட்ட பலதமிழ் மற்றும் சிங்களபெயர்களினையும் சொற் களினையும் அவற்றின் கருத்தினையும்கூட ஐயம்திரிபற தெளிவுற தெரிந்து கொண் டார். கடமை என எண்ணாமல் விருப்புடன் இவர் மேற்கொண்ட அல்லது இவ்வாறு இவர் கற்றுக்கொண்ட இத்தகைய பழைய நிலஉறுதிகளின் வாசிப்பானது ஈழத் தமிழரின் பழமையையும் வீரவரலாற்றையும் வெளிக்கொணர வழி சமைத்ததை பலரும் அறிந்திலர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்ஆட்சிசெய்த ஈழாளன் எனும் எல்லாளனுக்கும் வல்வெட்டித்துறைக்கும் நிரம்பிய வரலாற்றுத் தொடர்புண்டு. (இக்கட்டுரையின் விரி வஞ்சி அவை இங்கே தவிர்கப்படுகின்றது) அதேபோல் இன்று நாம்கண்ட ஆனந்த புரம்போல் அன்றும் ஒருபோர்க்களம் ஈழாளன் துட்டகைமுனு யுத்தத்திலும் காணப் படுவதை மகாவம்சம் உறுதிப்படுத்து கின்றது. இம்மோதல் நடந்தஇடத்தினை Kasa Mountain என மகாவம்சம் தனது இருபைத்தைந்தாவது அத்தியாயத்தில் தரு கின்றது. அனுரதபுரத்தின் வீரமரணமடைந்த ஈழாளன் குறிப்பிட்ட Kasa Mountain என்னும் இடத்தில் முன்னேறிவந்த துட்டகைமுனுவின் படைகளை எதிர்கொண்டு வலிந்துதாக்கினான். அதில் தோல்வி அடைந்து பின்வாங்கிய நிலையிலேயே அதன் பின்னர் நடந்த மோதலொன்றில் நகரத்தின் தெற்குவாசலில் ஈழாளன் வீரமரண மடைந்ததாக மகாவம்சஆசிரியரான மகாநாமா குறிப்பிடுகின் றார். இன்று ஆனந்த புரத்தில் வீரமரணமடைந்த எமது தாக்குதல் தளபதியின் பெயர் தீபன். அன்று Kasa Mountain ல் மரணமடைந்த எமது தாக்குதல்தளபதின் பெயர் ‘தீகஜந்து((Dighaj antu) என்ன ஒற்றுமை.

1500 வருடங்களிற்குமுன் எழுதப்பட்டு பின்மறைந்து விட்ட Kasa Mountain என்ற இடத்தினையும் அதன் புதியபெயரினையும் மேற்படி விமலதாஸ் பலத்த தேடுதலின்பின் கண்டுபிடித்திருந்தார். பெயர்படைத்த பல வரலாற்றுஆசிரியர்களும் பேராசிரி யர்களும் அடையாளம் காணத்தவறிய இவ்விடத்தை தனக்கே இயல்பான பொது அறிவாலும் அதீத வரலாற்றுவிருப்பாலும் முன்கூறியவாறு பழைய நிலஉறுதிகளை வாசித்துப்பெற்ற தனதுநீண்ட நிலஅள வை அனுபவத்தாலும் அரியதான யாரும் அறியாத இக்கண்டு பிடிப்பை இவர் செய்திருந்தார். வரலாற்றை ஆய்வுசெய்பவர் களுக்கே தெரியும் வரலாறுகள் மௌனமாகும்பொழுது இடப்பெயர்கள் வாய்திறந்து பேசக்கூடும் என்று.

நூறு வருடங்களிற்குமுன் Kasa Mountain என Wilhelm Geiger எனும் ஜெர்ம னியரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டபெயரே ‘“Kasa Pabbta” ‘ என சிங்களமொழி உறுதிகளில் எழுதப்பட்டிருந்ததை விமலிஅண்ணா கண்டுபிடித்து கூறினார். பர்வதம் எனும் வடமொழிச்சொல்லே Pabbta எனும் சிங்களச்சொல்லின் தாய் என்பதனையும் அவர் கூறத்தவறவில்லை.

போத்துக்கேயரின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தோம்பு எனப்படும் காணிப் பதிவு 1670களில் மறுபடியும் ஒல்லாந்தரால் மீளமைக்கப்பட்டது. மேற்க்கூறிய காலங்களைத்தொடர்ந்து காணிப்பதிவுகளில் காணப்படும் குறிப்பிட்ட ‘Kasa Pabbta’ என்னும் பெயர் இப்பதிவு காலங்களிற்கு முன்பிருந்தே வழங்கப்பட்டு வந்ததனை யாரும் புரிந்துகொள்ளலாம்.

இன்றைய ரித்திகல(Ritigala) என்னும் பிரதேசத்திற்கு வடமேற்காக அமைந்திருக்கும் Kahagalama என்னும் சிறிய கிராமம்தான் Kasa Mountain அல்லது Kasa Pabbta என நாம் தேடிய இடமாகும். ஆம் இதுதான் விமலிஅண்ணா கண்டு பிடித்ததுக்கூறிய அன்றைய ஆனந்தபுரம். மகாவம்சம் படிக்காமலேயே அது பொய்யென் றும் ‘எலாரா’ எம்மன்னன் என்றும் பிதத்துவோரிடையே மகா வம்சத்தில் கூறப்படும் இடங்களை தொல்லியல் சான்றாக்கி தமிழரின்தொன்மையை வன்மையை உலகிற்கு உறுதிப்படுத்திய இவரது ஞானம் என்றும் போற்றுதற்குரியது.

வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோவிலைத்தந்த திருமேனியார் வெங்கடா சலம்பிள்ளைஇ முத்துமாரிஅம்மன் கோவில்தந்த வேலாயுதர் புண்ணியமூர்த்தியார்இ சிதம்பராக் கல்லூரிதந்த சிதம்பரப்பிள்ளைஇ சிவகுரு வித்தியாசாலை தந்த சிவகுருஇ மற்றும் நவீனசந்தை தந்த சண்முகம்பிள்ளை ஞான மூர்த்தி அப்பா வழியில் முத்து மாரி அம்மனின் கல்யாண மண்டபம் தந்து வரலாற்றுப் பெருமைகொணடவர் கதிர் காமத்தம்பி விமலதாஸ் ஆவார்.

சொந்தப்பிள்ளைகள் இன்றி காலமாகியவர் வே.வ.சிவப்பிரகாசம் ஆசிரியர் இவரே முதன்முதலில் வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவிலுக்காக ‘வல்வை முத்துமாரிஅம்மன் கோவில் சரித்திரம்’ என்னும்நூலை 1963இல் எழுதியிருந்தார். வல்வெட்டித் துறை மக்களின் குலதெய்வமாக விளங்கும் குறிப்பிட்ட அருள்மிகு மாரிஅம்மனுக்கு அதுவரை வளங்கிவந்த வாய்மொழிக்கதைகளை தொகுத்து சிவப் பிரகாசம் ஆசிரியர் வழங்கிய அந்நூலே பின்னாட்களில் வல்வெட்டித்துறை முத்து மாரி அம்மன்பேரில் எழுந்ததும் முழுமையானதுமான ‘கைலைமலை மாதரசி’ போன்ற வரலாற்று நூல்களுக்கு ஆதாரசுருதியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

வல்வெட்டித்துறை முத்துமாரிஅம்மனுக்கு மேற்படி முதலில் வரலாறுதந்த பெருமை மிக்கவர் சிவப்பிரகாசம் ஆசிரியர் ஆவார். நேரடிச்சந்ததி இன்றி மறைந்த ஆசிரிய ருக்கு உரிமையான பலகாலமாக பயன்பாடின்றி காணப்பட்டநிலங்களை அடையா ளம் கண்டு ஒன்றிணைத்து அவ்விடத்தில் அழகிய கல்யாண மண்டபம் உருவாக் கிய பெருமை விமலிஅண்ணா என்ற கதிர்காமத்தம்பி விமலதாஸிற்குரியது. குறிப்பிட்ட அவ்விடத்தில் தபால்கந்தோர் அமைக்கும் அரசியல்வாதிகளின் எண்ணத்தை பின்தள்ளி கோவிலிற்கு தொடர்ந்துவருமானம் தரும் வகையில் இவரின் தீர்க்கமான பார்வையில் உருவாகியதே முத்து மாரிஅம்மன் திருமணமண்டபமாகும். போர்க்கால சூழ்நிலையால் புலம்பெயர்ந்த உரிமையாளர்களையும் உரியவர் இன்றி அடையாளம் காணமுடியாதிருந்த ஏனைய நில உடமை யாளர்களையும் தேடித் தொடர்புகொண்டு நிலத்தைப் பெற்று கோவிலின்பெயரால் அவ்அழகிய திருமணமண்டபத்தை இவர் உருவாக்கியிருந்தார். பலவருடகாலமாக யாருக்கும் தெரியாமல் கோவிலின் பெயரில் வவுனியாவில் இருந்தகாணியினை அடையாளம்கண்டு அதனை உரியமுறையில் விற்பனைசெய்து முத்துமாரிஅம்மன் கோவிலுக்கு கிடைத்த பங்கான 90இலட்சத் திற்கு அதிகமான நிதியினைப்பெற்றே இவர் இம் முயற்சியினை ஆரம்பித்திருந்தார்.

இவரது இந்தமுயற்சிக்கு இவருடன் சார்ந்த அன்றைய நிர்வாகசபைத்தலைவர் கா.தர்மகுலசிங்கம்(குலம்) மற்றும் உறுப்பினர்களும் உறுதுணையாக இருந்து இவர து கனவை நிறைவேற்றினர். இவரது பெருமுயற்சியின் பயனாக 23.11.2012 காலை 6.30மணியளவில் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அத்துடன் இக்கல்யாண மண்டபத்திற்குரிய காணியை(நிலத்தை) வழங்கியவர்களின் பெயரை யும் கல்லில்பொறித்து மண்டபத்தின் முன்வைத்த பெருமை விமலதாசிற்குரியது. இவர் செயலாளராக இருந்த இக்காலத்தில் குறிப்பாக 15.04.2012இல் இந்துகலாச் சார அமைச்சின் அனுமதியடன் ஆரம்பிக்கப்பட்ட முத்துமாரி அம்மன் தேவஸ்தான அறநெறிப்பாடசாலையும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு திருப்பணிகளையும் பொதுப் பணிகளையும் வௌ;வேறு காலங்களில் புதியவர்கள் முன்வந்து புதிதாக செய்தோ அல்லது திருத்திமுடித்தாலும் இல்லாத ஒன்றினை திட்டமிட்டு நேர்த்தியாக முதலில் செய்பவரே வரலாற்றில் வாழ்வார்.

புண்ணியமூர்த்தியாரால் கற்கட்டிடயாக உருவாக்கப்பட்ட வல்வெட்டித்துறை முத்து மாரி அம்மன்கோவிலில் அவர்பெயரை குறிப்பிடும் எந்தஆதாரங்களும் இன்று கண்ணில் தென்படுவ தில்லை. ஆனால் கோவிலை அமைத்தவர் புண்ணியமூர்த்தியார் என்பதில் மறுப்பேதும் இல்லை. இதுபோலவே நிறுவனர் திருமேனியார் வெங்கடாசலத்தின் பெயர் எதுவும் வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று காணப்படவில்லை. இவையெல்லாம் புராதன அல்லது பழைய வரலாற்றுசெய்திகள் ஆகிவிட்டன என் பதுவும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்றைய சமகாலத்தில் கல்யாண மண்டபம் கட்டிட கைகொடுத்தது அதனை முடித்துவைத்த அன்பர்கள் பலராகும் மறுப்பேதும் இல்லை. எனினும் அதனை திட்டமிட்டு செய்துமுடித்தவர் அமரர் விமலதாஸ் என்னும் விமலி அண்ணாதான் என்பதில் யாருக்கும் கேள்வியில்லை.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே’ என்னும் கூற்று பழையதுதான். ஆனால் என்றும் பாவனைக்கு புதியது. அதுபோலவே கதிர்காமத்தம்பி விமலதாஸ் ‘ முத்துமாரிஅம்மன் கல்யாணமண்டபம்’ என்னும் பெயரால் வல்வெட்டித்துறையில் எங்களுடன் என்றும் வாழ்வார்.

வல்வெட்டித்துறை வரலாற்றிலும் இவரது ஆய்வுப்பணிகள் காத்திரமானவை. வல்வெட்டித்துறை பிரதேசத்தின் பரப்பளவை கணிப்பது முதற்கொண்டு இதன் நில அமைவையும் இவர் ஆராய்திருந்தார். கடற்கரையில் இருந்து தெற்குப்புறமாக உயர்ந்துசெல்லும் எமதுநகரம் கடல்மட்டத்தில் இருந்து சுமாராக இரண்டுமீற்றர்; உயரமுள்ள தரையமைப்பை கொண்டுள்ளதாக கணித்த அவர் கடற்கரையோர சமவெளியாக காணப்படும் வல்வெட்டித்துறையின் மேற்குப்பகுதியின் சிலஇடங்களில் ஆறுமீற்றர்வரை உயரமுடைய சுண்ணக்கற்பாறைகளை கொண்ட ‘சின்னமலை ஏற்றம்’ மற்றும் ‘பெரியமலைஏற்றம்’ ஆகிய பிரதேசங்கள் காணப்படுகின்றதையும் அளவிட்டுக் கூறியிருந்தார்.

இறுதியாக வல்வெட்டித்துறையிலிருந்து நிலஅளவையாளராக இவர் வெளிவந்தபின் நாற்பதுவருடங்களள் கடந்தும் புதியதொரு நிலஅளவையாளரை நாம் உருவாக்க வில்லை. வல்வெட்டித் துறைக்கான புதியசிவப்புவிளக்காக இவரது இழப்பு ஏற்படுத்தி யிருக்கும் இப்பாதிப்பு இனிவரும் காலங்களில் எமதுமண்ணிற்கு மிகஅதிகமான தாகும்.

எமதுமண்ணின் எவ்வளவோ அரியபல வரலாற்றுசெய்திகளையும் கோவில்கள் தொடர்புடைய கதைகளையும் புனிதமாக கொண்டு அவைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டியங்கிய அவரது இழப்பு எனதுஆய்வுகளிற்கு பெரும்பின்னடைவாகும். ‘வல்வாய்(வல்வை)க் கடலோடிகளின் காவற்காரனே கப்பற்கிழவன்’ எனும் கப்பலு டைய பிள்ளையார் கோவில்பற்றிய ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்கு பெரும் உந்து கோளாக இவரே இருந்தார். எமது முன்னோர்களின் பாராமுகத்தால் கைவிட்டுப் போய் பலிபீடம் மட்டுமே இன்று எமக்கானாலும் கோவிலின் சங்காபிஸேகத்தையும் இவரே தொடர்ந்து செய்துவந்தார். இவை மட்டுமன்றி அண்மையில் வெளிவந்த ‘கைலைமலை மாதரசி’ நூலிலும் இனி வெளிவர இருக்கின்ற எனதுநூல்களிலும் அவரது பங்களிப்பு மிகமிக அதிகமாகும்.

போர்க்காலச்சூழலுக்கு முன்பிருந்தது போல வல்வெட்டித்துறை தொண்டைமானாறு கடற்கரைதடத்தில் 752ம் இலக்க போக்கு வரத்து சேவையினை ஆரம்பிக்க இவரெ டுத்த பகீரதமுயற்சியும் இவ்விடத்தில் குறிப்பிடக்கூறியதே. தனது மைந்தன் பிரகாஸின் அறிமுகங்களினூடாக எமது சமூகத்திற்காக போக்குவரத்து அமைச்சு வரை சென்றே இதனையும் இவர் வெற்றிகரமாக முடித்திருந்தார்.

2004.10.12இல் தொண்ணூறு வயதுவரை வாழ்வாங்கு வாழ்ந்து கனடாவில் மறைந்தவர் முன்னால் ‘பட்டினசபைத்தலைவர்’ சோமசுந்தரம் சுந்தரலிங்கம் அப்பா அவர்கள். பெரியவரின் முப்பத்தியோராவதுநாள் நினைவு சுந்தரமலரில் ‘வரலாற்றில் ஒரு வரலாறு’ எனவொரு நினைவுப்பதிவை செய்திருந்தேன். அதனைப் படித்துவிட்டு பலவருடங்களிற்குப் பின்னும் அதனைப்பற்றி என்னுடன் பேசியவர். ஆனால் இன்று சடுதியாக எமைவிட்டு மறைந்த இவருக்காக ‘காலத்தால் அழிக்கமுடியாத வரலாறு’ என கண்ணீருடன் வரையவேண்டியநிலை ஏற்பட்டுவிட்டது.

ஆம் ‘சென்றுவாருங்கள் விமலிஅண்ணா சென்றுவாருஙங்கள்’ வல்வெட்டித்துறையின் பெருவரலாற்றில் நீங்களும் அழிக்கமுடியாத ஒரு வரலாறுதான். அந்தவரலாறு உங்களை வணங்கியே தீரும்.

இறுதியாக ‘என்னதம்பி’ என்றுகேட்கும் உங்களதுகுரல் என்றும் என்காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்

கனடாவிலிருந்து அன்புத்தம்பி
வர்ணகுலத்தான்(பொன்.சிவகுமார்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here