வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகம்.

வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் அமரர்களான கந்தசாமி குகதாஸ் ஜெயட்சுமி பார்த்தீபன் ஆகியோரின் ஞாபகார்த்தமமாக நடத்திய பெண்களுக்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நேற்று முன்தினம் குறித்த மைதானத்தில் இடம்பெற்றது.
இவ்விறுதியாட்டத்தில் வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகமும் வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகமும் பலப்பரீட்சை நடத்தின. மூன்று செற்களைக் கொண்ட இச்சுற்றுப்போட்டியில்25:15 25:17 என்ற புள்ளிகளைப் பெற்று 2:0 என்ற நேர செற் கணக்கில் நேதாஜி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது.







