பொப்பிசைச் சக்கரவத்தி ஏ.இ.மனோகரன் இன்று காலமாகிவிட்டர்

0
675 views

பிரபல ஈழத்துப் பாடகர் ஏ.இ.மனோகரன் இன்று திங்கட்கிழமை இரவு சென்னையில் காலமாகிவிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பொப்பிசைப் பாடல்கள் பலவற்றை பாடடிய மனோகரன், இந்தியாவில் தமிழ் சினிமாவிலும் சின்னத்திரை நாடகங்களிலும் நடத்துள்ளார்.

‘வாடைக்காற்’ ‘பாசநிலா’ ‘ புதிய காற்று’ ஆகிய பல ஈழத்து தமிழ் திரைப் படங்களிலும், ‘ஜே ஜே’ போன்ற குறிப்பிட்ட சில தென்னிந்திய தமிழ் திரைப்படங்களிலும் மனோகரன் நடித்துள்ளார்.

இலங்கையில் பொப்பிசைச் சக்கரவத்தி என பலராலும் அழைக்கப்பட்ட மனோகரன், தமிழ், சிங்களம், மலே, ஹிந்தி, உள்ளிட்ட பல மொழிகளில் பாடி, ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் என கலைஞர்கள் கூறுகின்றனர்.

”சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா“ என்ற பாடல், ஈழத்தில் மாத்திரமல்ல, தமிழகம் உள்ளிட்ட தமிழ் மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் புகழ்பெற்றது. அத்துடன் அந்தப்பாடலை ஹிந்தி, மலையாளம், பேரர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட பல மொழிகளிலும் பாடி உலக கலைஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.

நீண்டகாலமாக சென்னையில் வாழ்ந்து வரும் ஏ.இ.மனோகரன், இந்தியக் கலைஞர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் அவர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இடங்களில் மேடைகளில் பொப்பிசைப் பாடல்களை பாடி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.

குறிப்பாக, மனோகரன் பாடிய பொப்பிசைப் பாடல்களில் ”சின்ன மாமியே உன்ன சின்ன மகள் எங்கே“ என்ற பாடல் 1970களில் இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமாக பாடப்பட்டு வந்தது.

1970, 80 களில் இலங்கை வாணொலியிலும் அவரது பாடல்கள் தினமும் ஒலிபரப்பட்டு வந்தன. மனோகரன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.

இவரின் புகழுடல் பொதுமக்கள், கலைஞர்கள் உள்ளிட பலதுறையினரின் அஞ்சலிக்குப் பின்னர், எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை சென்னையில் தகனம் செய்யப்படும் என உறவினர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here