யாழ்ப்பாணத்தில் இதுவரை 100 பேர் கைது..!

0
432 views

கடந்த சில வாரங்களாக யாழில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து யாழ் குடாநாடு முழுவதும் பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழின் ஐந்து பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பாதுகாப்பு இராணுவத்தினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறு குற்றங்கள் உட்பட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய 100 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4ஆம் திகதியில் இருந்து நேற்று வரையான காலப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு தொடர்புடைய சந்தேக நபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அடையாளம் உறுதி செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள், வேன்கள் மற்றும் லொரிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here