பருத்தித்துறை ஐக்கியத்தின் கால்ப்பந்தாட்டத்தொடரில் நவஜீவன்ஸ் வி.க திக்கம் இளைஞர் வி.க என்பன வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

0
584 views

பருத்தித்துறை கால்ப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் நடத்தும் கால்ப்பந்தாட்டத் தொடர் திக்கமுனை மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.அதில் நேற்று முன்தினம் இடம் பெற்ற ஆட்டத்தில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகமும் உடுப்பிட்டி யுத் விளையாட்டுக்கழகமும் மோதின. .இரு அணியினரும் சமபலத்துடன் மோதிய போதும் கிடைத்த பல சந்தர்ப்பங்கள் பயன்படுத்தாமல் வீணாகிப் போக கோல் கணக்கு ஆரம்பிக்கப்படாமலே ஆட்டம் நிறைவுக்கு வந்தது இதனை அடுதாது வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பு உதையில் 5:4 என வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நவஜீவன்ஸ் அணி.இப்போட்டியின் ஆட்ட நியகனாக அவ்வணியைச்சேர்ந்த சுரேஸ்தெரிவு செய்யப்பட்டார்.
தொடர்ந்து இடம்பெற்ற ஆட்டத்தில் திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகமும் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகமும் மோதின. இதில் அபாரமாக விளையாடிய திக்கம் இளைஞர் அணி 4:1 என வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது திக்கம்.வெற்றி பெற்றது போட்டியின் ஆட்டநாயகனாக திக்கம் இளைஞரின் அகிலதீபன் அணியின் நிவேதன் தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here