வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான 10 ஆவது தடகளப் போட்டி இன்று ஆரம்பம்

0
490 views

வடமாகாணப்பாடசாலைகளுக்கிடையிலான 10 ஆவது தடகளப் போட்டிகள் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று கோலாகலமாக ஆரம்பித்தது.
வடமாகாண கல்விப்பணிப்பாளர் சி.உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகார அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணிகலந்துகொண்டார். இவருடடன் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி எஸ் சர்வேஸ்வரன் கல்வி அமைச்சின் செயலாளர்ஆர் ரவீந்திரன்உட்பட வலயக்கல்விப்பணிப்பாளர்கள் மாகாண கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் கோட்டக் கல்விப்பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர் முன்னதாக மைதானத்திற் நுழைவாயிலிருந்து விருந்தினர்கள் மகாஜனா கல்லூரி மாணவர்களின் பாரம்பரிய இசைக்கருவிகள் இசை முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர் .
தொடர்ந்து தேசியக் கொடி மாகாணக் கொடிகள் ஏற்றபபட்டத்தைத் தொடர்ந்து 12 வலயங்களையும் சேர்ந்த வீரங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை இடம்பெற்றது .அதனைத்தொடர்ந்துவிளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.நேற்று ஆரம்பமான இந்த விளையாட்டு நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இடம்பிறவுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here