வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரியில் அமைக்கப்பட்ட கணித மூல வள நிலையம் வடமராட்சி கல்வி வலய பிரதிக்கல்விப் கல்விப்பாளரினால் நேற்று முன்தினம் சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இக்கல்லூரியின் ஊட்டப்பாடசாலைகளான வல்வை மகளிர் கல்லூரி, வல்வை சிவகுரு வித்தியாலயம், வல்வை அ மி.த பாடசாலை ,கம்பர்மலை அ.த.க பாடசாலை ,கெருடாவில் இந்துத்தமிழ் கலவன் வித்தியாலயம், தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்கும் மாணவர்களின் நன்மை கருதி இந்த கணிதமூல வள நிலையம் அமைக்கப்பட்டது.
கல்லூரி அதிபர் சி.குருகுலலிங்கம் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவில் வடமராட்சி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் யோ ரவீந்திரன் நாடா வெட்டித் திறந்து வைத்தார்.














