தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வடமாகாணத்துக்கான கால்ப்பந்தாட்ட அணி ஒன்று உருவாக்குவதற்கான நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது. அந்த அணியை பலமிக்க அணியாக மாற்ற எம் மண்ணிலுள்ள உதைபந்தாட்ட ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் சிவன் பவுண்டேசன் நிறுவுனர்வேலாயுதம் கணேஸ்வரன்
குப்பிளான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக்கழகம் நடத்திய கால்ப்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று குறித்த மைதானத்தில் இடம்பெற்றன. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது;
இந்த மண்ணில் இடம்பெற்ற பல்வேறு வகையான போராட்டங்களும் தோல்வியில் முடிவடைந்துள்ளன. இத்தோல்விஙளில் இருந்து நாம் மீள்வதற்கு கல்வி மற்றும் விளையாட்டையும் விருத்தி செய்ய வேண்டும். விளையாட்டைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு விளையாட்டுக்களிலும் சர்வதேச ரீதியாகச் சாதிக்க கூடிய பல வீர வீராங்கனைகள் எம் மண்ணில் உள்ளனர்.அவர்களை ஒருங்கpணைத்து போதிய பயிற்சிகள் ஏனைய இதர வசதிகளைச் செய்து கொடுப்பதன் மூலம் தேசிய மட்டத்தில் மட்டுமல்லாது சர்வதேசத்திலும் சாதிக்க முடியும்.அதற்கு வேண்டிய பங்களிப்புக்களைச் செய்ய பல புலம் பெயர் அமைப்புக்களும் சிவன் பவுண்டேசனும் தயாராகவுள்ளது.
அதன் முதற்கட்டமாக தமிழர்களுக்கான கால்ப்பந்தாட்ட அணி ஒன்றை உருவாக்கி சர;வதேச தரம் வாய்ந்த பயிற்சியாளர்களை நியமித்து பயிற்சிகளை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் இவ்வணியைத் தெரிவு செய்வதற்கு கால்ப்பந்தாட்டத்துறையில் தேர்ச்சி பெற்ற அனைவரும் எம்முடன் ஒண்றினைந்து செயற்பட முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .