கொலன்னாவை மீதொட்டமுல்லப் பகுதியில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிவன் அறக்கட்டளை நிறுவுனர் தலைமையிலான குழுவினர் உதவிப் பொருட்களை வழங்கினர்

0
208 views

கொலன்னாவை மீதொட்டமுல்லப் பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிவன் அறக்கட்டளை நிறுவுனர் தலைமையிலான குழுவினர் உதவிப் பொருட்களை வழங்கினர்
அண்மையில் கொலன்னாவை மீதொட்டமுல்லப்ழகுதியில் குப்பை மேடுகள் சரிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிந்ததுடன் பலர் வீடுகளற்று நிர்க்கதியாகியுள்ளளனர்.
அப்பகுதிக்கு நேற்றுமுன்தினம் சென்ற சிவன் அறக்கட்டளை நிளுவுனரும் தமிழீழவிடுதலை இயக்கத்தின் கொள்கைபரப்பு செயலாளருபான கணேஸ் வேலாயதம் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது குறித்த அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து டேரன்ஸ் என் த சில்வா மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு படுக்கைக்கான பஞ்சு மெத்தைகள் மற்றும் அவசர மின்விளக்குகளையும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here