திருமதி அழகையா சரஸ்வதி
தோற்றம் : 27 ஒக்ரோபர் 1935 — மறைவு : 24 மார்ச் 2017
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு நிருவத்தம்பையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அழகையா சரஸ்வதி அவர்கள் 24-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு பார்வதி தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் மூத்த மருமகளும், காலஞ்சென்ற அழகையா அவர்களின் அன்பு மனைவியும், லோகநாதன், கலையழகன், மகேஸ்வரி, கெளரி, மதியழகன், பாஸ்கரன் ஆகியோரின் அருமைத் தாயாரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தெய்வானைக்கண்டு, அமிர்தலிங்கம் இலட்சுமிப்பிள்ளை, காத்தலிங்கம் தையல் நாயகி, தம்பு கதிரவேலு, தம்பு ஆறுமுகம், மற்றும் இராஜரட்ணம் பூரணம் ஆகியோரின் அருமைச் சகோதரியும், தவரஞ்சினி, இளவரசி, செல்லக்குமரன், பாலசுந்தரம், சாந்தி, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கனகரத்தினம், கந்தையா தேவராசா, மற்றும் கந்தையா குணரட்ணம், கந்தையா சந்திரலிங்கம், கந்தையா புலேந்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், தனஞ்சயன், லக்சிகன், கிரிதரன், பிரியங்கா, சஜித்தா, கோபிகா, சாந்தசொரூபன், துவாரகன், மேனன், தனு ஷாலினி, கிருஷிகா, மதூஷன் ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் அவரது இளைய மகளின் இல்லத்தில் வைக்கப்பட்டு 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் குடும்ப மயானமான மயிலியதனை, ஊரிக்காட்டு மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு
லோகநாதன் — கனடா
தொலைபேசி: +14169013966
கலையழகன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148472790
செல்வக்குமரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776066991
கெளரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775090923
மதியழகன் — பிரித்தானியா
தொலைபேசி: +442087560348
பாஸ்கரன் — கனடா
தொலைபேசி: +16478989203
செல்லிடப்பேசி: +16478702978