நெல்லியடி மத்திய சந்தை வியாபாரிகளுக்கும் சந்தை குத்தகை காரர்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு நீதிமன்றின் மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
குறித்த சந்தையில் நீண்டகாலமாக வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளிடம் திடீரென வாடகைப்பணம்அதிகமாக அறவிடுவதற்கு சந்தையை புதிதாக குத்தகை எடுத்த நபர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.ஆனால் ஏனைய சந்தைகளை விட பலமடங்கு வாடகைப்பணத்தை தங்களhல் செலுத்த முடியாது எனக்கூறி அப்பணத்தைச் செலுத்த வியாபாரிகள் மறுப்புத்தெரிவித்திருந்தனர்
இந்நிலையில் இரு தரப்பினருக்குமிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
நெல்லியடிப் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த கரவெட்டிப் பிரதேச சபைச் செயலாளர் எஸ்.வினோராஜ் மற்றும் வியாபாரிகள் குத்தகைக்காரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
சந்தையை குத்தகைக்குப் பெற்றுக்கொண்டவர் தான் அதிக விலை கொடுத்து சந்தையைக் குத்தகைக்கு எடுத்தபடியால் தான் கேட்கும் கட்டணத்தை வியாபாரிகள் செலுத்தவேண்டும் என விடாப்பிடியாக நின்றார்.அதுபோல வியாபாரிகளும் அவ்வாறு செலுத்தமுடியாது என திட்டவட்டமாகத் தெரிவpகத்தனர்.
இந்நிலையில் இருபகுதியினருக்குமிடையில் ஓர் இணக்கப்பாடு காணப்படாத நிலையில் நீதிமன்றின் மூலம் தீர்வைப்பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரியால் தெரிவிக்கப்பட்டதுடன் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற;கொள்ளப்பட்டன.