ஜெயலலிதா மறைவிற்கு மூன்றாவது நாளாக திருச்சி வாழ் ஈழத்தமிழர்கள் அஞ்சலி!

0
525 views

ஜெயலலிதா மறைவிற்கு மூன்றாவது நாளாக திருச்சி வாழ் ஈழத்தமிழர்கள் அஞ்சலி!
தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு மூன்றாவது நாளாக திருச்சி வாழ் ஈழத்தமிழர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.
திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத்தமிழர்களால் ஈழத் தமிழ் மக்கள் சார்பில் அஞ்சலி மேற்கொள்ளப்பட்ட இடத்தில் ஒன்றுகூடியவர்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்விடத்தில் நேற்று மாலை 6 மணியளவில் ஒன்றுகூடிய ஈழத்தமிழர்கள் அஞ்சலி செலுத்தி மூன்றுநாள் துக்க அனுட்டிப்பை நிறைவு செய்தார்கள்.
பிரத்தியேகமாக தாயார்செய்து வைக்கப்பட்டிருந்த பதாகையில் கடந்த மூன்று நாட்களாக பலர் கையொப்பங்களை இட்டு தமது இரங்கலை பதிவுசெய்திருந்தார்கள்.
உணர்வெழுச்சியுடன் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி நிகழ்வு நடத்தியதன் மூலம் திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத்தமிழர்கள் தமது நன்றிக்கடனை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here