05:05 பழைய வாகனங்களின் ஏற்றுமதிக்கு வரி நிவாரணம்
05:04 இலங்கையிலுள்ள 100 மிகப்பெரிய தனியார் கம்பனிகனிகளை அரசாங்கத்துடன் இணையுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன்.
05:04 தன்னியக்க டெலர் இயந்திரங்கள் மூலம் பணம் மீளப்பெறுவதற்கான கட்டணம் 10 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
05:04 இணையத்தள பரிமாற்றங்களுக்கு வரி அறவிடக்கடும்
05:03 பழைய வாகன ஏற்றுமதிக்கு வரிச்சலுகை.
05:02 100 பொருட்களுக்கான தீர்வை குறைப்பு.
05:02 இலத்திரனியல் மோட்டார் வாகனங்களுக்கான வரி குறைக்கப்படும்.
05:01 கார்பனுக்கு புதிய வரி.
05:00 சமூர்த்தி பயனாளிகளுக்கு மாதாந்தம் 5 கிலோகிராம் அரசி.
05:00 பெல்மடுல்லவில்இ அனர்த்த முகாமைத்துவ மையமொன்று அமைக்கப்படும்
05:00 425 கிராம் நிறையுடைய உள்நாட்டு டின்மீன் 125 ரூபாய்.
04:59 உள்நாட்டு பால் மா 250 கிராமின் விலை 250 ரூபாய்.
04:58 மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 5 ரூபாயால் குறைப்பு.
04:57 வௌ்ளை சீனிஇ கிலோகிராமொன்று 2 ரூபாயால் குறைப்பு.
04:57 நெத்தலி ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபாயால் குறைப்பு.
04:57 உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபாயால் குறைப்பு.
04:56 பருப்பு ஒரு கிலோகிராமின் விலை 10 ரூபாயால் குறைப்பு.
04:56 பயறு ஒரு கிலோகிராமின் விலை 15 ரூபாயால் குறைப்பு.
04:56 வருமான வரி மீள்பரிசீலனை செய்யப்படும்
04:54 நெடுஞ்சாலைகளுக்கான கட்டணங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணிவரையான நேரத்தில் 50 ரூபாயாக குறைக்கப்படுகின்றது
04:54 லக் சதொசவுக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு. ஒவ்வொரு சதொசவுக்கு 10இ000 ரூபாய்
04:53 சூரிய சக்தி திட்டங்களுக்கான கடனுக்கு 1இ500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:53 சதொச சில்லறை விற்பனை நிலையங்கள் 100-ஐ நிர்மாணிக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:52 மாத்தறை கடற்பிராந்திய அபிவிருத்திக்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:52 மாத்தறை கடற்பிராந்திய அபிவிருத்திக்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:51 பொருட்களின் விலைகள் குறைவடைகின்றன
04:50 ரியல் ஸ்டேட் மேலாண்மை தகவல் அமைப்பைஇ உள்நாட்டு இறைவரித்திணைக்களத்துக்குள் உள்ளடக்கப்படும்
04:49 சிறிய குளங்களுக்காக 3இ000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:49 நஞ்சற்ற நாடு திட்டத்துக்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:48 நீதிமன்றங்களை நிர்மாணிப்பதற்கும் புனரமைப்பதற்கும் 1இ750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:47 கிராம சேவகர்கள் உள்ளிட்ட அரச சேவையாளர்களுக்கான 1000 சேவை நிலையங்களை அமைப்பதற்கு 1இ500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:45 அரச சேவையாளர்கள் 14 இலட்சம் பேர் இருந்தாலும்இ பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளில் கடமையாற்றுவோருக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
04:44 பொதுச்சேவைகள் குறித்தான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படும்
04:43 பொதுச் செயலாளர் பொதுப்பணி துறையை ஆய்வு செய்தல்
04:42 இளைஞர்களது திறமைகளை வளர்க்கஇ 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:41 புதிதாக துறவியாகுபவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 2இ500 ரூபாய் புலமைப்பரிசில் வழங்கப்படும். இதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:41 வெளிநாட்டு தொழிலாளர்களின் ஆகக்குறைந்த ஊதியமாக 300 டொலர்.
04:40 ஊடகவியலாளர்கள்இ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்குஇ 50 வீத மானியத்தின் கீழ்இ 150இ000 ரூபாய் கடன்.
04:39 சமய ஸ்தலங்களை அபிவிருத்தி செய்வதற்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:38 ஊடகத்துறையிலுள்ளவர்களுக்கு 300இ000 ரூபாய் கடன் வசதி
04:38 சுகததாச விளையாட்டரங்கு புதுப்பிக்கப்படும். இதற்குஇ 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
04:37 இளைஞர் தொழில் பயிற்சி மையங்களுக்காக 4இ000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:37 பண்டித் அமரதேவ கலாசார நிலையத்துக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:36 போதைப்பொருளுக்கு எதிரான பொலிஸ் பிரிவுக்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:36 வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப 180 மில்லியன் ஒதுக்கீடு.
04:34 தேசிய இளைஞர் படையணிக்கு 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:34 தேசிய இளைஞர் படையணிக்கு 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:34 நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவுக்கும் 1 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:34 சர்வதேச வெசாக் உற்சவத்துக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:33 புகையிலை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஜனாதிபதி நிதியத்துக்கு 500 மில்லியன் ரூபாய் நிதியொதுக்க புகையிலை பொருட்கள் சங்கம் யோசனை முன்வைத்துள்ளது.
04:33 பட்டதாரிகளுக்கான தொழிற்றுறையொன்றை ஏற்படுத்துவதற்காகஇ 1.5 மில்லியன் ரூபாயைஇ வட்டியின்றி வழங்க நடவடிக்கை. இதற்காகஇ 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:32 ரயில்வே துறையில் முற்கொடுப்பனவு அட்டையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
04:31 ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்த நடவடிக்கை
04:30 வாழ்க்கைப்பூராகவுள்ள அக்ரஹார திட்டத்தை நீடிக்க திட்டம்
04:30 ஓய்வூதியக் கொடுப்பனவுத் திட்டமானதுஇ வெடிக்கும் நிலையிலிருக்கும் குண்டாகும். ஓய்வூதியக் கொடுப்பனவுக்காகஇ 1000 மில்லியன் ரூபாய்.
04:28 இராணுவ வீரர்களுக்கான பாதுகாப்பு கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க ரூபாய் 3500 மில்லியன் ஒதுக்கீடு
04:28 அரசாங்க வீட்டுத்திட்டங்களில் 10 வருடங்களுக்கு மேல் வாழ்தோர் அவர்களது வீட்டின் உரிமத்தை மாற்றுவதற்கு 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:28 படையினரின் கொடுப்பனவுக்கு 3500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:28 சமுர்திப் பயனாளிகளின் வருமானம் அதிகரிக்கப்படும். சமூர்த்தி திட்டத்தை ” ஜன இசுர” என பெயரிட நடவடிக்கை
04:26 மாடி வீடுகளைக் கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 40 சதவீத கடன்
04:26 லயன் அறைகளில் வசிப்போருக்கு 25000 வீடுகள் வழங்கப்படும்.
04:25 15 வருடங்களுக்கும் மேலாக அரச வீடுகளில் வசித்துவருவோருக்கான வீட்டு உரிமையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க 2 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.
04:23 தேசிய சேமிப்பு வங்கி மற்றும் வீடமைப்புத்துறை வங்கி ஆகியன ஒன்றிணைந்து 7 சதவீதக் கடன் திட்டத்தை வழங்குவதற்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
04:23 நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக முகவர் நிறுவனமொன்று அமைக்கப்படும். அதற்கு 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
04:20 வடக்கு இ கிழக்கு வீடமைப்பு திட்டத்திற்காக ரூபாய் 5 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு
04:19 பெருந்தோட்டத்துறை தோட்டத் தொழிலாளர்களுக்கான 25 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும். இதற்கான காணிகள் அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும்.
04:19 குறைந்த மற்றும் நடுத்தர குடும்பங்களுக்காக 5 இலட்சம் வீடுகள்
04:19 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் புதிய உள்நாட்டு விமான சேவை
04:18 நிதி பரிமாற்ற சிறுவனங்கள் 200 ஆரம்பிக்க அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்கப்படும்.
04:18 பிரமிட் திட்டங்கள் மற்றும் கடன் வசூலிப்புத் திட்டங்கள் போன்றவற்றுக்கு எதிரான சட்டங்கள்இ நிதி நிறுவனங்கள் வரை நீடிக்கப்படும்
04:17 நிதி முகாமைத்துவம் தொடர்பான நிறுவனமொன்று உருவாக்கப்படும்.
04:17 நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிமுகப்படுத்தப்படும்
04:17 மின்சாரத்தை குறைந்த விலையில் மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பது உறுதி செய்யப்படும்.
04:16 திருகோணமலை நீர்த்திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:16 2018ஆம் ஆண்டளவில்இ புகையிரதம் மற்றும் இலங்கை போக்குவரத்துக்குச் சேவைகள் சுய நிதியுதவியில் இயங்கும்
04:14 நாடளாவிய ரீதியான குடிநீர்த்திட்டங்களுக்கு 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:14 இலத்திரனியல் வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:14 முச்சக்கரவண்டி மற்றும் வான்களை கட்டுபடுத்த நிறுவனம்.
04:13 புகையிரதம் மற்றும் பஸ்களில் அட்டைகளின் மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான திட்டம்
04:13 பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளை ஒழுங்கு படுத்த நடவடிக்கை….
04:13 பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகன உரிமையாளர்கள்இ 32 இருக்கைகளை கொண்ட பேரூந்துகளை 75மூ வட்டிச் சலுகையின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:13 10 வருடங்களுக்கும் பழமையான ஹொட்டல்களுக்கு மீள் புனரமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:11 கூட்டங்கள்இ மாநாடுகள்இ ஊக்குவிப்புகள்இ கண்காட்சி கைத்தொழிலுக்கு 1இ000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:11 பாடசலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான்களுக்கு பதிவாக 35 இருக்கைகளை கொண்ட பஸ்களை அறிமுகப்படுத்துவதற்கு ஊக்கச் சலுகை வழங்கப்படும்
04:09 துறைமுகத்தில் 12 மணித்தியாலங்கள் நங்கூரமிட இலவசம்.
04:09 முச்சக்கரவண்டிகளுக்கு ஊக்குவிப்பு அளிக்காமல்இ இலத்திரனியல் கார்களை அறிமுகப்படுத்துவற்கு 2 பில்லியன் ரூபாய் அறிமுகம்
04:08 பதுளைக்கு நெடுஞ்சாலைகளை அமைப்பது சாத்தியமான என்பது குறித்து ஆராயப்படும்
04:08 மத்திய மற்றும் ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும்.
04:07 உல்லாசப ்பயணிகளுக்கான இலத்திரனியல் விசா முறை அறிமுகப்படுத்தப்படும்.
04:07 சுற்றுலா வீடுதிகளில் குறைந்த அறைக் கட்டணம் இனங்கண்டு அறிவிக்கப்படும்.
04:06 நெனோ தொழில்நுட்பத்தை இலங்கையிலுள்ள கல்வி நிறுவகங்களில் அறிமுகப்படுத்துவதற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:05 சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலா முக்கோண வலயம் அமைக்கப்படும்.
04:05 தெற்கு அதிவே நெடுஞ்சாலை பதுளை வரை விருத்திச் செய்யப்படும்.
04:05 நிர்மாணத் துறைக்காக விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத இறக்குமதித் தீர்வை நீக்கப்படும்.
04:05 விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பங்களுக்காக 1306 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:05 இணையத்தள பயணத்துறையில் பொதுவான தொழில்நுட்பம் கொண்டுவரப்படும்
04:05 பதுளைஇ எல்ல பண்டாரவளை ஆகிய பிரதேசங்கள் சுற்றுலா வலையமாக அபிவிருத்தி செய்யப்படும்
04: 03 பதுளையில் உள்நாட்டுக்கான விமானிநிலையம் அமைக்கப்படுவதற்கான சாத்தியம் உண்டு
04:03 மொபிடல் நிறுவனத்தை பொது நிறுவனமாக பட்டியற்படுத்தல்
04:03 ஸ்ரீ லங்கன் எயார்லைன் மற்றும் மிஹின் எயார் வர்த்தகரீதியாக்கப்படும்
04:02 நனோ தொழிநுட்ப நிறுவனங்களுக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
16:02 அரச வியாபாரங்களை அபிவிருத்திச் செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய்…
16:02 வர்த்தகத்துறைக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
16:01 பெருநகரங்களுக்காக 750 மில்லியன் ரூபாய் நேரடி முதலீடு – நிதியமைச்சினால்
16:00 அதிவேக நெடுஞ்சாலை பகுதியில் சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் வியாபார நிலையங்களை அமைக்க 1000 மில்லியன் ஒதுக்கீடு தனியார் துறைக்கும் அழைப்பு
16:00 இலங்கையின் பெயரை பிரசித்தபடுத்த 100 மில்லியன் ரூபாய்
15:58 ஆடைத் தொழிற்துறைக்கு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள விசேட நடவடிக்கை.
15:58 முறையான முதலீட்டாளர்களுக்கு 5 வருடங்களுக்கான விசா பெற்றுக்கொடுக்கப்படும்…
15:57 இலங்கையின் உற்பத்திகளுக்கும் தேவைகளுக்கும் பன்முகத்தன்மை அவசியம்…
15:56 மட்பாண்டம் மற்றும் களிமண் உற்பத்திகளுக்காக களிமண்ணை பெற்றுக்கொடுப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தீர்ப்பது தொடர்பாக ஜனாதிபதியின் ஆலோசனையின் படி அதற்கு விருப்பமான அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படு
15:53 உப்பு தொழிற்துறை அரச மற்றும் தனியார் பிரிவுகளுக்காக திறக்கப்படும்….
15:51 ஓடு மற்றும் பீங்கான் தொழிற்துறைக்கு நிவாரண உதவி…
15:50 கொழும்பு நகரில் கைவினைப் பொருட்கள் விற்பனை மத்தியநிலையமொன்றை அமைக்க நடவடிக்கை…
15:49 ஆடை இ கைத்தறி தொழிலின் அபிவிருத்திக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுக்க பரிந்துரை இ அதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு…
15:46 வேலைவாய்ப்பினை 50 தொடக்கம் 300 வரை பெற்றுக்கொடுத்துள்ள வியாபாரிகளுக்கு 25 வீத சலுகை கடன் திட்டம் ..
15:43 தனியார் துறையினருக்கு வாரத்திற்கு ஐந்து நாள் வேலை… (45 மணி நேர வேலை)
15:41 சிறிய மற்றும் நடுத்தர கடன் உத்தரவாத திட்டத்திற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
15:39 அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெறும் அனைத்து நோயாளர்களுக்கும் இ மருத்துவமனையை விட்டுச் செல்லும் போது அவர்களுக்கான செலவீனம் குறிப்பிடப்பட்ட கையேடு ஒன்றினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை …
15:35 வியாபாரங்களை மேற்கொள்வதற்கான வசதிகளை ஊக்குவிக்க நடவடிக்கை
15:33 அனைத்து மருந்தகங்களும் பதிவு செய்யப்படுதல் வேண்டும். இல்லையேல் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்
15:32 மருத்துவமனையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தஇ 25 ஆயிரம் மில்லியன்…
15:30 தொழில் பயிற்சித் துறைக்கு புலமைப்பரிசில் முறையொன்று..
15:28 தாதியர் பயிற்சி கல்லூரிகளின் அபிவிருத்திக்காக 200 மில்லியன்…
15:28 பாடசாலை மாணவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான காப்புறுதி…
15:27 கிராமப்புற பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புதிய நடவடிக்கை …
15:26 பல்கலைக்கழக விரிவுரை நேரம் இரவு 8 மணி வரை நீடிப்பு…
15:25 பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி சாரா நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன்
15:23 கராப்பிடிய மருத்துவமனையில் பத்து மாடி கட்டிடமொன்றை நிர்மாணிக்க 500 மில்லியன் ….
15:22 2020ம் ஆண்டளவில் பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும்…
15:21 விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம்….
15:20 2017ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதியில் இருந்து அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சேமிப்பு கணக்கொன்றை திறப்பதற்கு வணிக வங்கிகளின் இணக்கம்….
15:16 மாணவர்களுக்கு இலகுவாக அறிவை பெற்றுக்கொள்வதற்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை பெற்றுக் கொடுக்க 4500 மில்லியன் ஒதுக்கீடு…
அந்த வேலைத்திட்டத்தை மேலும் வெற்றிபெறச் செய்ய 2017 ஆம் ஆண்டு உயர் தர மாணவர்களுக்கு இலவசமாக டெப் கணணி …
15:15 ஒரு பாடசாலைக்கு அதிக பட்சம் 50 கணணிகள் வீதம் பெற்றுக்கொடுப்பதற்காக 5000 மில்லியன் ….
15:14 பத்தாயிரம் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்கு மேலதிகமாக 2000 மில்லியன்…
15:13 கல்வியை ஊக்குவிப்பதற்கு மேலதிக ஒதுக்கீடாக 17 840 மில்லியன் …
15:11 குளங்களை புனரமைப்பதற்காக 600 மில்லியன்…
15:11 கொக்கோ கோப்பி பாக்கு மிளகு போன்ற இடை பயிர்செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை
15:08 கோழி இறைச்சி ஒரு கிலோகிராமை 420 க்கும் கீழ் குறைவான விலையில் பராமரித்து செல்லுமாறு விற்பனையாளர்களிடம் கோரிக்கை … அசாதாரணமாக விலை அதிகரிக்கப்படாவிட்டால் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை
15:05 கோழி இறைச்சிக்காக விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை குறைப்பு ….
15:04 நீர்வாழ் தாவர பயிர்செய்கை வலையங்களை அமைப்பதற்கு 500 மில்லியன்…
15:02 கூட்டு நன்னீர் மீன்பிடி கிராமங்கள் 100 னை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம்
14:57 இறப்பர் மீள் பயிர்ச்செய்கைக்கு 9 பில்லியன்…
14:55 அம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் மட்டக்களப்பு மாவட்டங்களில் மீன் பிடித்துறையை அபிவிருத்தி செய்ய 1200 மில்லியன் ரூபாய்
14:54 மொனராகலை மட்டக்களப்பு அம்பாறையின் சீனி தொழில்துறை தொடர்பாக வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளதுடன் சீனி ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை
14:51 உயர் தர பால் மாடுகள் 15 ஆயிரத்தை இறக்குமதி செய்ய வௌிநாடுகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
14:49 தேசிய பால் விவசாய வலையமொன்றை அமைத்தல்
14:47 தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் புதிய நெற் களஞ்சியசாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல்
14:46 ஏற்றுமதி சந்தைகளை நோக்கமாக கொண்டு பழங்களை பயிரிடுவதற்காக 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்படும்
14:45 வடமேல் பல்கலைக்கழகத்தினுள் உணவு பிரிவொன்றை அமைப்பதற்கு யோசனை
14:42 மாற்று ஓய்வூதியம் தொடர்பில் அவதானம்…
14:42 முதியோர் தொடர்பில் அவதானம்..
14:41 சிறிய நடுத்தர சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்..
14:41 கடல்சார் வளகங்கள் ஊடாக பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல்..
14:41 கல்வி சுகாதாரம் காணி தொடர்பில் விஷேட அவதானம்..
14:40 உயர் வேலைவாய்ப்புகளுக்கான வாய்ப்புகள் மற்றும் மாற்று வசதிகள் தொடர்பில் அவதானம்
14:40 வேலையின்மைப் பிரச்சினை குறைந்து வருகிறது.
14:39 சமுத்திர வளங்களில் இருந்து அதிக பயன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்..
14:38 நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை – ரவி
14:37 தனியார் துறையை ஊக்குவிப்பதற்காக முதலீட்டு வலையங்கள்…
14:37 முதலீடுகளை கவர்வதற்கு பல்வேறு திட்டங்கள்…