இந்தியாவில் இன்று முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது – மோதி

0
634 views

இன்று(09-11-2016) முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய பிரதமர் நரோந்திர மோதி அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தவறுகளை களைய வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோதி கறுப்பு பணத்தை ஒழிக்க தனது அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

நாளை மற்றும் நாளை மறுநாள் நாள் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் நாட்டில் பல இடங்களில் இயங்காது என்றும் பிரதமர் மோதி குறிப்பிட்டார். கையிருப்பில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் அதனை டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பர் 11 ஆம் தேதி வரை பெட்ரோல் பங்குகளில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here