வல்வை விளையாட்டு கழகம் நடாத்திய அமரர் யோகச்சந்திரன் ஞாபகார்த்த 40-வயதுக்கு மேற்பட்டோருக்கான 9-நபர் கொண்ட உதைப்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் நேற்று இடம்பெற்றது இதில் மணல்காடு சென் அன்ரெனீஸ் அணி எதிர் கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணியும்மோதின.
முதலாவது பாதியாட்டத்தில் சென் அன்ரெனீஸ் அசத்தல் 02:00 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்தது இரண்டாவது பாதியாட்டத்தில் ஆட்டத்தை வேகப்படுத்தியது யங்கம்பன்ஸ் அனுராகாந்தனின் சிறந்த கோல்களுடன் முன்னிலையானது சென் அன்ரெனீஸ் அணி மேலும் ஒரு கோல் போட்டு ஆதிக்கம் செலுத்தியது யங்கம்பன்ஸ் அணி வீரர் கோல் போட்டு ஆட்டத்தை சமப்படுத்தினார் இறுதியாட்ட நேர முடிவில் 03:03என்ற ரீதியில் ஆட்டம் சமநிலையானது வெற்றியை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் 04:02 என்ற கோல் கணக்கினால் மணல் காடு சென் அன்ரெனீஸ் அணியை வீழ்த்தி கிண்ணத்தை தனதாக்கியது கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி.
சிறந்த ஆட்ட நாயகன் மணல் காடு சென் அன்ரெனீஸ் வீரர் கமல் தெரிவு செய்யப்பட்டார் .தொடர் ஆட்ட நாயகன் யங்கம்பன்ஸ் அணி வீரர் அனுராகாந்தன் தெரிவு செய்யப்பட்டார்.