நீண்ட வாதப்பிரதிவாதங்கள் இழுபறிகளுக்கு மத்தியில் வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவராக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வ.கமலேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்.
வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவராக இருந்த அன்ரனி ஜெகநாதன் இந்த மாதம் முதலாம் திகதி இயற்கை மரணமடைந்தார். அவரது இடத்தை நிரப்புவதற்கு கட்சிகளிடையே போட்டி நிலை காணப்பட்டது. இந்நிலையில் நேற்றைய அமர்வில் வட மாகாண முதலமைச்சர் இல்லாத நிலையில்
தெரிவு இடம்பெற்றது. பிரதி அவைத்தலைவராக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வ கமலேஸ்வரனின் பெயரை வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சதாதியலிங்கம் முன்மொழிய ஆர்னல்ட் வழிமொழிந்தார் .அந்நிலையில் எம் கே சிவாஜிலிஙாகம் அனந்தி சசிதரனை முன்மொழிய சர்வேஸ்வரன் வழிமொழிந்தார். இதனையடுத்து இடம்பெறாற வாக்கெடுப்பில் கமலேஸ்வரன் 18 வாக்குகளையும் அனந்தி சசிதரன் 13 வாக்குகளையும் பெற்றனர். இதனையடுத்து வெற்றி பெற்ற கமலேஸ்வரன் பதில் முதலமைச்சர் த.குருகுலராஜா முன்னிலையில் பிரதி அவைத்தலைவராக பதவயேற்றுககொண்டார்