லண்டனில் ATM மெசினில் காசை களவாடிய 3 பேர் பொலிசாரிடம் சிக்கினர்.

0
471 views

லண்டன் புற நகர்ப் பகுதியான ரூட்டிங்கில் சில தமிழ் இளைஞர்கள் வேற்று நாட்டவர்கள் துணையோடு போலியான அட்டைகளை தயாரித்து அதனூடாக ஏ.ரி.எம் மெஷினில் காசை களவாடி வந்துள்ளார்கள்.

இவர்கள் நீண்ட காலமாக இயங்கிவந்துள்ள நிலையில். இவர்களை பிடிக்க லண்டன் மெற்றோ பொலிடன் பொலிசார் ரகசிய நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளார்.

இதனை அடுத்து  அவர்கள் மேற்கொண்ட தேடுதலில் மூவர் தற்போது சட்டன் என்னும் இடத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்.

CCTV  கமராக்கள் உதவியோடு தாம் அவர்களை கைதுசெய்ததாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

ஒரு தமிழர் அடங்கலாக 2 ஆபிரிக்க நாட்டவர்களும் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இவர்கள் எரிபொருள் நிரப்பும் மற்றும் சில தமிழ் கடைகளை குறிவைத்து. அங்கே போலியான இயந்திரங்களைப் பொருத்தி. மக்களது கிரெடிட் கார்ட் இலக்கங்களைப் பெற்று. பின்னர் அதனைப் போன்ற ஒரு போலியான பிளாஸ்டிக் அட்டையை தயாரித்து பணத்தை எடுத்து வந்துள்ளார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here