விதிமுறைகள்
1. சுற்றுப்போட்டி பதினொரு பேர் கொண்டது. விலக்கல் முறையில் நடைபெறும்.
2. கால் இறுதி ஆட்டத்திலிருந்து லீக் முறையில் நடைபெறும்
3. இப் போட்டியில் பங்குபற்றும் 20 வீரர்களது பெயரை அந்த உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் செயலாளர் சிபாரிசுடன் 20 பேரது போட்டோ பிரதியும் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
4. போட்டிகள் 30 – 40 நிமிடங்கள் நேர அளவினைக் கொண்டு நடைபெறும். ஆனால் கால் இறுதி, அரை அறுதி, மூன்றாம் இடத்திற்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டிகள் 45-15-45 நேர அளவினைக் கொண்டு நடைபெறும்.
5. உதைபந்தாட்ட சட்ட விதிகளுக்கு அமைவாக போட்டிகள் நடைபெறும்.
6. சிவப்பு அட்டை காட்டப்பட்ட வீரர் தொடர்ந்து வரும் அடுத்த போட்டியில் பங்குபற்ற முடியாது. எனினும் தொடர்ந்து வரும் இரண்டாவது போட்டியில் கலந்து கொள்ளலாம். (வீரர்களினது பங்குபற்றல், நடுவர்களினது அறிக்கையும் போட்டிக் குழவினது தீர்மானத்திலும் தங்கியிருக்கும்)
7. போட்டிகள் சம்பந்தப்பட்ட ஆட்சேபனை மனு இரு பிரதிகளுடனும், மற்றும் ரூபா ஆயிரம் கட்டணத் தொகையுடனும் போட்டி முடிவடைந்து 30 நிமிட நேரத்திற்குள் போட்டிக் குழவிடம் ஒப்படைத்தல் வேண்டும். இப் பிரதிகளில் ஒன்று எதிரணிக்கு வழங்கப்பட வெண்டும்.
8. இறுதியாட்டம் Play Offமூலம் தெரிவு செய்யப்படும்.
9. போட்டிக்கு உகந்த பந்து கட்டாயமாக கொண்டுவர வேண்டும்.
10. போட்டிகள் எக்காரணம் கொண்டும் பிற்போடப்பட மாட்டாது.
11. லீக் சுற்றில் சம புள்ளிகளைப் பெற்ற அணிகளுக்கு போட்டிகள் மீள நடத்தப்படும்.
12. சுற்றுப்போட்டியில் பங்குபற்றாத அணிக்கு தண்டப்பணமாக ரூபா 5000, ளுரிநச8ல் பங்குபற்றாத அணிக்கு ஒவ்வொரு போட்டிக்கும் ரூபா 25000 தண்டப்பணமாக அறவிடப்படும். அடுத்தவருடம் இடம்பெறும் வடமாகாண வல்லவன் சுற்றுப்போட்டியிலும் பங்குபற்ற முடியாது.
தொடர்புகளுக்கு 0773946463










