காதலர்களின் களியாட்ட இடமாக மாறிவரும் தொண்டைமானாறு உல்லாசக் கடற்கரை….

0
490 views

தொண்டைமானாறு உல்லாசக் கடற்கரைப்பகுதி காதலர்களின் களியாட்ட இடமாக மாறிவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமானதொண்டைமானாறு அக்கரைப் பகுதியிலுள்ள கடற்கரைப்பகுதியானது உல்லாசக்கடற்கரையாக மாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வரப்படுகின்றது.இதில் சிறுவர் விளையாட்டு முற்றம் அமைக்கப்பட்டுள்ளதுடன் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கடற்கரைக்கு விடுமுறை தினங்களில் தூர இடங்களில் இருந்துவருகின்ற ஜோடிகள் சல்லாபத்தில் ஈடுபட்டு வரவதுடன் பாலியல் சேஸ்டைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.அத்துடன் மாலை நேரங்களில் அப்பகுதியிலுள்ள சிறுபற்றைகளுக்குள் இருந்து மதுபானம் அருந்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உல்லாசக் கடற்கரையைக்கு அண்மையில் பிரசித்தி பெற்ற சன்னிதி முருகன் ஆலயம் மற்றும் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் என்பன காணப்படுகின்றன.மாலை வேளைகளில் பாடசாலை மாணவர்கள் உட்பட தினமும் பலர் பொழுதுபோக்குவதற்காக வந்துசெல்கின்றனர்.அங்குவரும் இளம்சோடிகளின் சல்லாபத்தினால் அவர்கள் பெரும் இடர்களை எதிர்நோக்கி வருகின்றனர்.எனவே கடற்கரைக்கு வருவோரின் நலன்கருதி சம்பந்தப்பட்டவர்கள் பொருத்தமான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவ்வாறு தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் மிகவும் மோசமான பாலியல் சேஸ்டைகள் ஏற்படும் அபாயமுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here