பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் ஆண்களிடம் இருந்து தப்பிக்க ‘ஷாக்கிங் கிளவுஸ்’ என்ற புதிய கருவியை மாணவர் ஒருவர் கண்டு பிடித்து உள்ளார்.
அந்த மாணவர் பெயர் நிரஞ்சன் சுதார். 17 வயதான இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் அகோர் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.கலைத்துறை பாடம் எடுத்துள்ள நிரஞ்சன் சுதாருக்கு மின்கருவியை கையாள்வதிலும்இ எலட்க்ரானிக் பொருட்களை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.
டெல்லியில் சமீபத்தில் நடந்த மாணவி நிர்பயா கொலை சம்பவம் நிரஞ்சன் மனதை பெரிதும் பாதித்தது. காம கொடூரர்களிடம் இருந்து பெண்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள புதிய கருவியை கண்டுபிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.அவனது 2 ஆண்டு ஆராய்ச்சியில் உருவானது தான் ‘ஷாக்கிங் கிளவுஸ்’ 150 கிராம் எடையில் கையுறை போன்ற வடிவமைக்கப்பட்ட இதனுள் சிம்கார்டுஇ சி.சி.டி. கேமிரா மற்றும் 3.4 வால்ட் மின்சக்தி கொண்ட பேட்டரி போன்றவை பொருத்தப் பட்டு உள்ளது.இதனை தயாரிக்க ஆகும் செலவு ரூ.500 தான்.
தனியாக செல்லும் பெண்கள் இந்த கையுறையை அணிந்து கொண்டால் போதும். ஆண்கள் யாராவது அவர்களிடம் வம்பு செய்து தொட்டால் ஷாக்கிங் கிளவுசில் உள்ள 3.4 வால்ட் மின்சாரம் 220 வால்ட் மின்சார சக்தியாக மாறி அவனை வீழ்த்திவிடும்.இதில் ஜிபிஎஸ் கருவியும் மபொருத்த்பட்டு உள்ளது. இதனால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு எஸ்.எம்.எஸ் சென்று விடும். அதோடு அதில் உள்ள கேமிரா அந்த ஆண்களை படம்பிடிக்கும். ஷாக்கிங் கிளவுசை பரிசோதித்து பார்த்த பலர் மாணவனை பாராட்டி னார்கள்.
ஜனவரி 26 ந்தேதி டெல்லியில் நடைபெற்ற அறிவியல் கண்ட்காட்சியில் நிரஞ்சனின் கண்டுபிடிப்பு அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.அதுபோல் டெல்லியில் மார்ச்மாதம் நடைபெறும் தேசிய அறிவியல் கண்காட்சியிலும் நிரஞ்சன் இந்த கருவியை வைக்க உள்ளார். டெல்லியைச் சேர்ந்த மின்னணு நிறுவனம் ஒன்று மாணவனின் ஆராய்ய்ச்சி சாதனத்தின் மாதிரியை கேட்டு உள்ளது அதனை நுகர்வோருக்கு பயன்படும் வகையில் மாற்ற அது முடிவுசெய்துள்ளது








