வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகம் நடத்தும் தேசிய ரீதியாக சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களையும் கலாபூசணம் விருது பெற்றவர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.பருத்தித்துறை பிரதேச செயலர் இ.த. ஜெயசீலன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர் சி.நந்தகுமார் கலந்து கொள்ளவுள்ளார். இதில் வாழ்த்துரைகளை கலாசாரப்பேரவை உறுப்பனரும் ஓய்வு பெற்ற பெரும்பாக உத்தியோகத்தருமான எஸ்.உருத்திரேஸ்வரன் ,ஓய்வு பெற்ற அதிபர் திருமதி செல்வமலர் சுந்தரேசன் ஆகியோர் நிகழ்த்துவர்.
இந்நிகழ்வில் கலாபூசணம் விருது பெற்ற வல்வை ந.அனந்தராஜ், யோ.இருதயராஜா ஆகியோரும்,தேசிய ரீதியாக நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் முதலாமிடத்தை பெற்ற சி.மார்க்கண்டு,இரண்டாமிடம் பெற்ற பா.வேதநாயகம் ஆகியோரும் கௌரவிக்கப்பட்வுள்ளனர்.







