நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தின் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

0
252 views

நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தின் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றிநேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இராசையா பிரதீபன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்ற தாபரிப்பு வழக்கு ஒன்றின் எதிராளியான குறித்த நபர் வழக்கு தவணைகளில் நீதிமன்றத்துக்குச் சமூகமளிக்காததுடன் தாபரிப்பு பணத்தையும் கட்ட தவறியதால் அவருக்கு எதிராக 18ஆம் திகதி நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து குறித்த நபர் நெல்லியடிப் பொலிஸாரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுஇ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தனக்குத் தானே தீ மூட்டிகொண்டுள்ளார். தீயை அணைத்த பொலிஸார் சந்தேகநபரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறைக்கூண்டுக்குள் எவ்வாறு இச்சம்பவம் இடம்பெற்றது என்பது தொடர்பாக கடமையிலிருந் உபபொலிஸ் அதிகாரி ; நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here