FIRST FRESH FOOD LIMITED (லண்டன்) இன் அனுசரணையுடனும் தமிழ் mirror மற்றும் உதயன் பத்திரிகையின் ஊடக அனுசரணையுடனும் மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்தமாக சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் உள்ளுர் கழகங்பள் பங்குபற்றும் கால்ப்பந்தாட்டப் போட்டியின் நேற்றைய ஆட்டதில் வல்வை றெஜின்போய்ஸ் வ.கழகம் 5: 1 என்ற கோல்கணக்கில் வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்து வெற்றி பெற்றது.
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அனுசரணையுடன் வல்வெட்டித்துறை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் உள்ளுர் கழகங்களுக்கிடையில் நடாத்து; கால்பபந்தாட்ச்சுற்றுப்போட்டியில் நேற்று கழக மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை றெஜின்போய்ஸ் விளையாட்டுக் கழகமும் வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் போடடியிட்டன .அதில் nறின்போய்ஸ் வி.கழகம் 5:0 என்ற கோல்களால் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக 3 கோல்களைப் போட்ட பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டார்.
அடுத்து நடைபெற இருந்த ஆட்டத்தில் ரேவடி விளையாட்டுக் கழகமும் தீருவில் வி.கழகமும் மோதவிருந்நதன .ஆனால் தீருவில் வி.க வருகைதராததால் ரேவடி அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.