பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியான நடத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று முனதினம் இடம்பெற்ற ஆட்டத்தில் நவிண்டில் கலைமதி விளையாட்டக் கழகம் வெற்றி பெற்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இப்போடடிகள் கழக மைதானத்தில் இடம்பெற்றன. இதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆட்டத்தில்வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகமும் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகமும் மோதின. போட்டியின் தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஆதிசக்தி வீரர் கௌரிதர்சன் 12 ஆவது நிமிடத்தில் கோல் அடித்ததன் மூலம் கோல் கணக்கினை ஆரம்பித்து வைத்தார்.
கோல் ஒன்றினை பெற்று ஆட்டத்தினை சமனிலைக்கு கொண்டு வர வேண்டும் என கலைமதி அணியினர் படாத பாடு பட்டனர் .இதற்காக கலைமதி ஆட்ட வேகத்தினை அதிகரித்த போதும் முதற்பாதியில் கோல் எதனையும் பெற முடியவில்லை. இரண்டாவது பாதியில் ஆதிசக்திக்கு கிடைத்த தண்ட உதையினை பிரசாந்த் கோலாக மாற்றியதன் மூலம் ஆட்ட நேர முடிவில் 2:0 என்ற கோல் கணக்கில் ஆதிசக்தி வெற்றிபெற்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக ஆதிசக்தி விளையாட்டக் கழகத்தைச் சேர்ந்த கௌரி தர்சன் தெரிவு செய்யப்பட்டார்.