யா/ வல்வை மகளிர் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தின் 2 பரப்பு நிலம் கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது.
எமது பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் கடற்கரை பக்கமாக இருந்த 2 பரப்பு காணி கடல் அலைகளால் அரிக்கப்பட்டு நிலம் இல்லாமல் போய்விட்டது.இவ்விளையாட்டு மைதானமான தற்போது விளையாட்டு நிகழ்வுகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இந்நிலை தொடருமாயின் முழுநிலமும் கடல் அலைகளால் அரிக்கப்பட்டு கடலுக்குள் சென்று விடும் அபாய நிலை காணப்படுகின்றது.
எனவே இதனை தடுக்கும் முகமாக பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு கடற்கரை பக்கமாக கல்லணை ஒன்று கட்டப்பட வேண்டும்.
பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு நேரே கடலில் உள்ள கருங்கல் பாறை (வட்டி) உயர்த்தப்பட வேண்டும்.
இதனை செயல்படுத்த எமக்கு அவசரமாக பழைய கட்டட இடிபாட்டு கற்கள், மக்கி, மண் என்பவற்றை மைதானத்தின் கிழக்கு பக்கமாக உள்ள மூலையில் கொட்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இத்தகவலை அனைவருக்கும் பகிர்ந்து உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு பழைய மாணவர் சங்க உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும்.
நன்றி




அ
அ








