அன்பழகனின் அனுசரணையுடன் வல்வை வீரர்களின் மென்பந்தாட்ட திறனை மேம்படுத்தும் நோக்கில் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்தாட்ட தொடரில் உதயசூரியன் கழகம் தீருவில் கழகத்துடன் இன்று 21-02-2022 இல் றெயின்போ மைதானத்தில் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய தீருவில் நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 75 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது..பந்துவீச்சில் கிசோக் 2 விக்கெட்டுக்களையும் கஜேந்திரன் ,நவீன் தலா 1 விக்கெட்டுக்களை பெற்றுக்கொடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உதயசூரியன் அணியானது 4.1 ஓவர்களில் வெற்றியிலக்கினை அடைந்தது.. உதயசூரியன் அணி சார்பில் அதிகபட்சமாக உதி 34 ஓட்டங்களையும் , வசந்தன் 15 ஓட்டங்களையும் கஜேந்திரன் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.