நாயன்மார்கட்டு குளப்புனரமைப்பு பணிகளும் யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பம்!

0
409 views

யாழ் நாயன்மார்கட்டு குளப்புனரமைப்பு பணிகள் இன்றைய  தினம் யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக மோட் நிறுவனத்தின் அருந்தவநாதன் அனோசனின் நிதியுதவியுடன் நாயன்மார்கட்டு குளப்புனரமைப்புஅபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது .
இன்று காலை 10 மணியளவில் யாழ் மாநகர முதல்வரின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்குளத்தின் மாதிரி திட்ட வரைபும் மக்கள் பார்வைக்காக வெளியிட்டு வைக்கப்பட்டது.
யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன், மாநகர பிரதி முதல்வர் ஈசன், மாநகர ஆணையாளர் ஜெயசீலன், மாநகர சபை உறுப்பினர்கள் சம்பிரதாயபூர்வமாக அடிக்கல் நாட்டி வைத்தனர்.
இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள்,  அப்பகுதி மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here