பஞ்சீர் பள்ளத்தாக்கு ஆப்கன் தாலிபன்களின் தாக்குதலுக்கு பணியுமா?

0
419 views

காபூலில் இருந்து சுமார் முப்பது மைல்களுக்கு அப்பால் குறுகிய நுழைவு வாயிலைக் கொண்ட ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் தாலிபனுக்கும்   தாலிபனை எதிர்க்கும் ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்க்கும் மோதல் நடைபெறுவதாக செய்திகள் வருகின்றன.

காபூலில் இருந்து சுமார் முப்பது மைல்களுக்கு அப்பால் குறுகிய நுழைவு வாயிலைக் கொண்ட ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் தாலிபனை எதிர்க்கும் ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள்.
தற்போது அங்குள்ள ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணி (NRF) என்ற ஆயுதக் குழு சமீபத்தில் இந்தப் பள்ளத்தாக்கின் வலிமையை உலகுக்கு நினைவூட்டியது.
நீண்ட, ஆழமான மற்றும் தூசி நிறைந்த இந்தப் பள்ளத்தாக்கு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கே தென்மேற்கு முதல் வடகிழக்கு வரை சுமார் 120 கிமீ நீண்டுள்ளது. இது உயரமான மலைச் சிகரங்களால் பாதுகாக்கப்படுகிறது.
இங்கு செல்வதற்கு ஒரேயொரு குறுகிய சாலை மட்டுமே உள்ளது. அதுவும் பெரிய பாறைகளூடே வளைந்து நெளிந்து செல்லும் பஞ்ஷிர் நதிக்கு இடையே செல்கிறது.


பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் மக்கள் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தஜிக் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆப்கானிஸ்தானின் முக்கிய மொழிகளில் ஒன்றான டாரி மொழியைப் பேசுகிறார்கள்.
பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் தாலிபன் எதிர்ப்புப் படைக்குத் தலைமை வகிப்பவர் 32 வயதான அகமது மசூத்.

 

 

 

 

 

 

 

 

 

இவர் 1980 மற்றும் 90களில் எதிர்ப்புப் படைகளுக்குத் தலைமை வகித்த அகமது ஷா மசூத்தின் மகன்.
மசூத்தின் தந்தை, “பஞ்ஷிரின் சிங்கம்” என்று பட்டப் பெயர் பெற்றவர். சோவியத் மற்றும் தாலிபன் படைகளை விரட்டிய முஜாஹிதீன் தளபதி. பஞ்ஷிர் என்றால் “ஐந்து சிங்கங்கள்” என்று பொருள்.
சோவியத்-ஆப்கன் போரின்போது அவர் கிளர்ச்சியின் முகமாக மாறினார்” என்று லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எலிசபெத் லீக் கூறுகிறார்.
தந்தை அகமது ஷா மசூத் இறக்கும் போது அகமது மசூத்துக்கு 12 வயது. அவர் லண்டனில் படித்தார், சாண்ட்ஹர்ஸ்டில் உள்ள ராயல் மிலிட்டரி அகாடமியில் ஓராண்டும் பயிற்சி பெற்றார்.
மசூத் இப்போது தனக்கு கூடுதல் தளவாடங்கள் வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.
தாலிபன் போராளிகள் தாக்குதலைத் தொடங்கினால், அவர்கள் நிச்சயமாக எங்களிடமிருந்து கடுமையான பதிலடியைச் சந்திப்பார்கள். ஆனாலும் எங்களுக்கு படைகளும் தளவாடங்களும் போதுமானதாக இல்லை என்பதை நாங்கள் அறிவோம்,” என்று அவர் தனது வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படியிருப்பினும் எதிர்வரும் காலங்களில் பஞ்ஷீர் களம் செய்திகளில் பலம் காணும் என்பது தெளிவாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here