40 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் மருந்துகள் அடுத்த மாதம் இலங்கைக்கு கிடைக்கும்

0
740 views

40 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் மருந்துகள் அடுத்த மாதம் இலங்கைக்கு கிடைக்க உள்ளதாக வரையறுக்கப்பட்ட அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மருத்துவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் எதிர்காலத்தில் அதிகளவானவர்களுக்கு கோவிட் தடுப்பூசியை வங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கோவிட் தடுப்பு குழுவின் விசேடக் கூட்டத்தில் குணசேன இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி வேலைத் திட்டத்திற்காக ஏற்கனவே 40 லட்சம் கோவிட் தடுப்பூசி மருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குணசேன குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here