இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகள் விமானங்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை இன்று முதல் நீக்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கை வரும் விமானங்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படும், ஒரு விமானத்தில் பயணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 75 அல்லது அதற்கு குறைந்த எண்ணிக்கையாகும் என்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ. வீ.ஜானக்க தெரிவித்துள்ளார்.








