தெற்காசியாவில் கையடக்கத் தொலைபேசிகளை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது இலங்கை. சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் 60 வீதமானோர் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் இந்த எண்ணிக்கை 69 வீதமாக உள்ளது. குறைந்தளவில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடாக பங்களாதேஷ் உள்ளது. அங்கு 41 வீதமானோர் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள் என தரவுகள் காட்டுகின்றன.








