பதற்றமான சூழ்நிலையில் மீண்டும் பூகொடயில் எரியும் முஸ்லிம் கடைகள்!

0
378 views

கம்பஹா, பூகொட பிரதேசத்தில் ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகளில் தீ பரவியுள்ளது.குறித்த விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பள்ளிவாசலுக்கு சொந்தமான வாடகைக்கு விடப்பட்ட கடைகளில் இவ்வாறு தீப்பரவியுள்ளது.

எனினும், குறித்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

நாடு முழுவதும், தற்போது அசாதாரண சூழல் நிலவுகின்ற நிலையில், இந்த சம்பவமும் விசமிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கண்டியில் இடம்பெற்றுவரும் இனக்கலவரத்தின் மற்றுமொரு வெளிப்பாடாகவும் இது இருக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.

எனினும் நாட்டில் தற்போது அவசர கால சட்டம் நடைமுறையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here