வடமராட்சி கல்வி வலயக் கல்விப்பணிப்பாளரின் மணிவிழா

0
677 views

வடமராட்சி கல்வி வலயக் கல்விப்பணிப்பாளரின் மணிவிழா நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 15.08.2020 காலை 8.30மணிக்கு பருத்தித்துறை சூரியமஹால் திருமணமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வடமாகாண ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் இடம்பெறும் இவ் மணிவிழா நிகழ்வில் வரவேற்புரையை பேராசிரியார் மா.நடராஜசுந்தரமும் ஆசியுரைகளை நெல்லண்டை ஸ்ரீபத்திரகாளி அம்மன் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ தியாகராஜக்குருக்கள், சோமஸ்கந்தராஜக்குருக்கள், பருத்தித்துறை பங்குத்தந்தை அ.பெ.பெனற் அடிகளாரும் நிகழ்த்தவுள்ளனர்.
மணிவிழா நாயகனுக்கான வாழ்த்துப்பாவை கரவெட்டி கோட்டக்கல்விப் பணிப்பாளர் கே.யோகநாதன் வழங்கவுள்ளார்.

வாழ்த்துரைகளை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் , வடமாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார் , வடமராட்சி கல்விவலய. பிரதி திட்டமிடற் கல்விப்பணிப்பாளர் இ.தமிழ்மாறன், வல்வை மகளிர் கல்லூரி அதிபர் செல்வி இ.சுப்பிரமணியக்குருக்கள், பருத்தித்துறைக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் மா.நவநீதமணி, யாழ் கல்வி வலய ஓய்வு நிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் த.அருணகிரிராஜா, வடமாகாண ஓய்வு நிலைக் கல்விப்பணிப்பாளர் ஆ.இராசேந்திரன், வடமராட்சி கல்வி வலய ஓய்வு நிலைக் கல்விப்பணிப்பாளர் சி.புஸ்பலிங்கம், யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராசா, யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன், வலிகாமம் வலய கல்விப்பணிப்பாளர் எஸ்.சுந்தரசிவம் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலர்.ஆ.சிறி ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here