கற்றல் இறுவட்டு வெளியீட்டு விழா

0
544 views

வடமராட்சி கல்வி வலயத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கற்கை நிலையத்தால் மாணவருக்காக தயாரிக்கப்பட்ட கற்றல் இறுவட்டு நேற்று வெளியீட்டு வைக்கப்பட்டது. குறித்த இறுவட்டு வெளியீடும் வளவாளர் கௌரவிப்பும் நேற்று செவ்வாய் கிழமை வலய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம வடமாகாண கல்விப்பணிப்பாளர் சி.உதயகுமாரும், சிறப்பு விருந்தினர்களாக கரவெட்டிப் பிரதேசசெயலர் ஈ.தயாரூபன் , பருத்தித்துறை பிரதேசசெயலர் ஆ.ஸ்ரீ மருதங்கேணிப் பிரதேச செயலர் கே.பிரபாகரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுவட்டின் வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக கல்வியற்துறை விரிவுரையாளர் ஐ.விஜயபாஸ்கரன் நிகழ்த்தினார்.இறுவட்டினை வலயக்கல்விப் பணிப்பாளர் வெளியிட்டு வைக்க பிரதமவிருந்தினர் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து இறுவட்டினை தயாரித்த வளவாளர்கள் விருந்தினர்களால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் உதவிக்கல்விப் பணிப்பாளர் நா.கந்ததாசன் வடமராட்சி கல்வி வலய பிரதித்திட்டமிடற் பணிப்பாளர் இ.தமிழ்மாறன் உட்பட வலய உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here