சிறப்பாக இடம்பெற்ற விளையாட்டு அறைக்கான அடிக்கல் நாட்டுவிழா

0
918 views

றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் விளையாட்டு அறைக்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று இடம்பெற்றது.

புதிய அபிவிருத்தி கிராம எழுச்சி (கம்பரலியா) திட்டத்தின் கீழ் கிராம அமைப்புகளுக்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கு அமைவாக நேற்றுக் காலை 08.50 மணியளவில் விளையாட்டு அறைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கழகத்தலைவர் ஐ.சண்முகரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

வடமராட்சி தொகுதி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் அவர்களின் ஒதுக்கீடு செய்த ரூபா பத்து இலட்சம் செலவில்
விளையாட்டு அறை மற்றும் இதர வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந் நிகழ்வுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.K.சிவாஜிலிங்கம், முன்னாள் வடமாகாசபை உறுப்பினர்கள் ச.சுகிர்தன், தர்மலிங்கம், வல்வெட்டித்துறை நசபைத் தலைவர் கோ.கருணாணந்தராசா மற்றும் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here